மனிதனை கொலை செய்த ரோபோ.. 

நவீன உலகில் திரும்பும் பக்கமெல்லாம் தொழில்நுட்ப கருவிகள். மனிதர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு வந்த மொபைல் போன், மனிதர்களின் நேரத்தையே இன்று உறிஞ்சுகிறது. தொழில்நுட்பத்தின் உச்சமான செயற்கை நுண்ணறிவில் கற்பனைக்கு எட்டாத நிகழ்வுகள் சாத்தியமாகின.

அதே சமயம், டீப் ஃபேக் மூலம் நடிகைகள் ஆபாசமாக சித்தரிக்கப்படுகின்றனர். மனிதர்களை போன்றே, மனிதர்களுக்கு மாற்றாக களம் இறக்கப்பட்ட ரோபோக்கள், தங்களது கொடிய முகத்தை காட்டினால் என்ன ஆகும் என்பதை, ஹாலிவுட் தொடங்கி தமிழ் சினிமாக்கள் வரை பல்வேறு படங்கள் சுட்டிக்காட்டி உள்ளன.

இந்நிலையில், திரைப்படத்தில் வரும் காட்சிகளை போன்ற சம்பவம், தென்கொரியாவின் தொழிற்சாலை ஒன்றில் உண்மையாகவே அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவில் உள்ள உணவு தொழிற்சாலையில் காய்கறி பெட்டிகளை தூக்கி, அரவை இயந்திரத்திற்குள் அனுப்ப ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து, ஓயாமல் உழைத்து வந்த ரோபோக்களில் சென்சார் பழுதானதால், அதனை சரி பார்க்கும் பணி நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக ரோபோ ஒன்று தொழில்நுட்ப வல்லுநரின் தலையை காய்கறி கூடை என நினைத்து தூக்கியுள்ளது. ரோபோவின் இரும்பு கைகளில் சிக்கிய தொழில்நுட்ப வல்லுநர், அதில் இருந்து மீள்வதற்கு போராடியுள்ளார்.

ஆனால், காய்கறி கூடை என நினைத்து தொழில்நுட்ப வல்லுநரை தூக்கிய ரோபோ, அரவை இயந்திரத்திற்குள் வீசியது. செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவிற்கே மனிதனை இனங்காணத் தெரியாத நிலையில், அரவை இயந்திரம், அவரை அடித்து சுக்குநூறாக்கியது. இயந்திரத்தை நிறுத்திய சக பணியாளர்கள், படுகாயம் அடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால், ரோபோவின் கைகளில் அடி வாங்கி, அரவை இயந்திரத்திற்குள் சிக்கியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனிதனை கொலை செய்த ரோபோ..
Comments (0)
Add Comment