சிங்கப்பூர் தானியங்கி பஸ் போக்குவரத்திற்கு அனுமதி

Autonomous Vehicles எனப்படும் தானியங்கி வாகனங்கள் தற்போது பரீட்சார்த்த நடவடிக்கைகளைக் கடந்து சந்தைக்கு வந்துள்ளன. 

அத்தகைய  Robobuses எனப்படும் தானியங்கி பஸ்களுக்கு சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளது. 

சிங்கப்பூரில் இந்த பஸ்களை மக்களின் பயன்பாட்டிற்காக இயக்குவதற்து இரண்டு அனுமதிப்பத்திரங்கள் WeRide நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

சீனாவைத் தலைமையகமாகக் கொண்ட WeRide நிறுவனம் தானியங்கி போக்குவரத்துத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. 

ஏற்கனவே சீனா, அமெரிக்கா, அமீரகம் போன்ற நாடுகளில் தங்களது தானியங்கி வாகனங்களை சோதித்துப்பார்க்க இந்நிறுவனம் அனுமதி பெற்றுள்ள நிலையில், சிங்கப்பூரில் தனது தானியங்கி பஸ் சேவையைத் தொடங்கியுள்ளது. 

M1 மற்றும் T1 எனும் இரண்டு அதிகாரப்பூர்வ அனுமதிகளை சிங்கப்பூரின் தரைவழிப் போக்குவரத்து ஆணையகம் (LTA) வழங்கியுள்ளது. 

WeRide தானியங்கி பஸ்கள் குறைந்த வேகத்தில், குறிப்பிட்ட வழிகளில், குறைந்த போக்குவரத்து நெரிசல்கள் உள்ள பகுதிகளில் தற்போது இயக்கப்படுகிறது. 

மேலும் சோதனை ஓட்டம் என்பதால், பேருந்தில் ஒரு ஓட்டுநர் மாத்திரம் அவசரகால பாதுகாப்பிற்காக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Comments (0)
Add Comment