3 பணயக்கைதிகளை தவறுதலாக சுட்டுக்கொன்ற இஸ்ரேல் இராணுவம்

வடக்கு காஸாவின் Shejaiya பகுதியில் பணயக்கைதிகள் மூவரை இஸ்ரேல் இராணுவம் தவறுதலாக சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) ஊடகப்பேச்சாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி (Daniel Hagari) நேற்று மாலை அறிவித்துள்ளார். 
 
தற்கொலை குண்டுதாரிகள் அடங்கலான தீவிரவாதிகளை இஸ்ரேல் இராணுவத்தினர் நேற்று காலை எதிர்கொண்டிருந்த வேளையில் இடம்பெற்ற இந்த துன்பகரமான சம்பவத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை முழு பொறுப்பையும் ஏற்பதாக  ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி குறிப்பிட்டுள்ளார். 

ஹமாஸ் படையினரால் Kibbutz Kfar Aza-வில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட  Yotam Haim, Alon Shamriz ஆகியோரும் Nir Am-இல் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட  Samar Fouad Talalka என்பவரும் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், பெண்கள், குழந்தைகள் அடங்கலாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், காஸாவில் மூன்று பணயக்கைதிகளை தீவிரவாதிகள் என கருதி இஸ்ரேல் இராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. 

ஹமாஸ் படையினரால் பிடித்துவரப்பட்ட குறித்த பணயக்கைதிகள் எவ்வாறு அங்கு வந்தார்கள் என உறுதியாகத் தெரியவில்லை எனவும் இஸ்ரேல் இராணுவம் ஆழ்ந்த துக்கத்தில் உள்ளதாகவும் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல் இராணுவம்உலகம்
Comments (0)
Add Comment