தொழில்நுட்ப கோளாறு காரணமாக இங்கிலாந்து விமான சேவையில் பாதிப்பு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இங்கிலாந்து விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய விமான சேவை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், நாட்டின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக விமான போக்குவரத்து துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்தின் தேசிய விமான சேவை தெரிவிக்கையில், 

‘எதிர்கொள்ளும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானங்களுக்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதனால் விமானங்கள் தாமதமாகலாம்’ என வலியுறுத்தியுள்ளது.

விமான சேவையில் பாதிப்பு
Comments (0)
Add Comment