தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வெளியாகியுள்ள கமல்ஹாசன் நடிக்கும் KH234 படத்துக்கான போஸ்டர் வீடியோ

0 69

Thug Life என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போஸ்டர் வீடியோவில் கமல்ஹாசன், “என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயகன், காயல்பட்டினம் என் சொந்த ஊரு, பிறவியிலேயே நான் ஒரு காங்ஸ்டர்னு முத்திரை குத்திட்டாங்க..”  என்று கூறும் வசனம் இடம் பெற்றுள்ளது. புகை சூழ்ந்த களத்தில் தனியொரு ஆளாக நிற்கும் கமலை தாக்க எதிரி படையினர் சிலர் ஓடி வருவது போல் அமைந்துள்ளது. படத்தின் பேரில் மட்டும் மாஸ் காட்டவில்லை போஸ்டர் விடீயோவிலேயே மாஸ் காட்டியுள்ளனர் என்று சொல்லும் அளவிற்கு அமைந்துள்ளது.

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் ஏற்கனவே 1987 ஆம் ஆண்டு நாயகன் திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தாலும், அதற்கு பிறகு இவர்கள் இருவரும் இணையாமல் இருந்தனர். இந்த நிலையில் 30 ஆண்டுகள் கழித்து Thug Life படத்தின் மூலம் கமல் மற்றும் மணிரத்னம் மீண்டும் இணைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.