தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வெளியாகியுள்ள யோகி பாபு நடிக்கும் சிம்பு தேவனின் ‘போட்’ படத்தின் டீசர்

0 486

யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள சிம்பு தேவனின் போட் படத்துடைய டீசர் தற்போ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தமிழில் – விஜய் சேதுபதி, இந்தியில் – அமீர்கான், கன்னடத்தில் – சுதீப், தெலுங்கில் – நாக சைதன்யா, மலையாளத்தில் – பிரித்விராஜ், ஆகிய முன்னணி நடிகர்கள் டீசரை வெளியிட்டுள்ளனர்

டீசரை பார்க்க…

போட் படத்தின் பெரும்பாலான காட்சிகள் கடலில் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதில் யோகி பாபுவுடன், கவுரி கிஷான், எம்.எஸ். பாஸ்கர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை ஜிப்ரான். எழுத்து இயக்கம் – சிம்பு தேவன்.

ஒளிப்பதிவு மாதேஷ் மாணிக்கம், தயாரிப்பு நிர்வாகம் சந்தானம், எடிட்டிங் தினேஷ் பொன்ராஜ். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் இயக்குனர் சிம்புதேவன் முன்னதாக வடிவேலு நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, விஜய் நடித்த புலி படங்களை இயக்கியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.