Developed by - Tamilosai
உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்து வரும் நிலையில் விரைவாகத் தீர்வு வழங்குமாறு கனியவள கூட்டுதாபனம் மீண்டும் திறைசேரியிடம் கோரியுள்ளது.
நேற்றைய தினம் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85 அமெரிக்க டொலருக்கும் அதிகமாகப் பதிவானது.
இதனை இலங்கை 92 அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்கின்றது.
இந்த நிலைமை தொடர்ந்தும் தங்களது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிற்கு பிரச்சினையாக உள்ளதென கனியவள கூட்டுதாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.