தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 52

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். மூன்றாம் இடத்தில் இருக்க கூடிய சந்திர பகவானால் உங்களுக்கு மனநிறைவும், சந்தோஷமும் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். முழுவதும் மன அமைதி கிடைக்கும். இன்று புதிய மனிதர்களின் சந்திப்பு புதிய உறவு அல்லது நல்ல யோசனைகள் கிடைக்க கூடியதாக இருக்கும். வியாபாரத்தில் லாபத்திற்கான சில வாய்ப்புகள் கிடைக்கும். நிதிநிலை மேம்படும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு குதூகலமான நாளாக இருக்கும். குடும்பத்தில் சுபங்கள் ஏற்படும்.இரண்டாம் இடத்தில் சந்திரனின் சஞ்சாரம் உங்களுக்கு மனத்திருப்தி தரும். ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் கூட இன்றைய நாளில் நல்ல முடிவுகளும் கிடைக்கும். சகோதர, சகோதரிகளின் உறவு மேம்படும். வேலையில் தெளிவாக செயல்படவும். பெருமாளை வணங்குவது நல்லது. புதன்கிழமை ஆன இன்று விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்யவும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாப வாய்ப்புகள் கிடைக்கும். சந்திர பகவான் இன்று உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார். இதனால் மன அமைதி கிடைக்கும். இன்று விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இன்றைய நாளில் உங்களுக்கு நல்ல செய்திகள் காத்திருக்கிறது. குடும்பத்தில் உறவினர்களின் வருகை சந்தோஷத்தைத் தரும். சிறு தொழில் செய்பவர்களுக்கு சாதகமான நேரம் அமையும். வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு வேலையில் வெற்றிகள் கிடைக்கும். சந்திர பகவான் 12ஆம் இடத்தில் இருப்பதால் உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். உறவினர்களின் வருகையால் உங்களின் மன அமைதி குறையலாம். பல நாட்களாக இருந்து வரும்

குடும்ப போராட்டங்களில் இருந்து விடுபட முடியும். இன்று நாள் முழுவதும் மன ஆரோக்கியமும், மன திருப்தியும் கிடைக்கும். கல்வியில் எதிர்பார்த்து வெற்றியை பெறுவீர்கள். புதிதாக நிலம், வீடு, வாகனம் வாங்கும் விருப்பம் நிறைவேறும். சுப செலவுகள் அதிகரிக்கும்

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் வெற்றிகள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். எடுத்த காரியத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும். உங்களுக்கு வழக்கு, விசாரணைகளில் இதுவரை இருந்த மனக்கவலைகள் தீரும். இன்று உங்கள் பணியிடத்தில் எதிரிகளை சமாளிக்க வேண்டியது இருக்கும். வியாபாரிகள் பண பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும். சகோதரர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நீங்கள் செய்யக்கூடிய வேலையில் முன்னேற்றமும், புதிய வாய்ப்புகளும் பெறுவீர்கள்.
புதன்கிழமை ஆன இன்று மகாவிஷ்ணு வழிபாடு செய்வது நல்ல


கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்தோஷமும், நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய குடும்ப பாரமும் தீரும். இன்று நாள் முழுவதும் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள், செயல்கள் குடும்பத்திற்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும். உறவினர்களின் வருகை சந்தோசத்தை தரும். குடும்ப விவகாரங்கள் வெற்றி பெறுவோம், பிரிந்து உறவுகள் ஒன்று சேரும். நண்பர்களின் உதவி மனதிற்கு திருப்தி தரக் கூடியதாக இருக்கும். எங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். கோபத்தை கட்டுப்படுத்தவும். இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் குறித்து விவாதிப்பீர்கள். மாலை நேரத்தில் திடீர் என பண பலன்கள் பெறுவீர்கள்.


துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களின் மனக்குறைகள் தீரும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டம தினமாக அமைகிறது. அதனால் நீங்கள் எடுக்கக்கூடிய எந்த ஒரு வேலையிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். உங்களின் பேச்சு, செயலில் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம்.
இன்று பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. இன்று புதிய மனிதர்களின் நல்ல ஆலோசனை கிடைக்கும். அவற்றை ஆராய்ந்து பயன்படுத்திக் கொள்ளவும். பிள்ளைகளின் தொடர்பான விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள்.​

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். இன்று உங்கள் ராசியில் உள்ள விசாகம் மற்றும் அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் கூடுதல் கவனமாக செயல்படுவோம். பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.

புதிய விஷயங்களை தள்ளிப் போடலாம். இன்று நீங்கள் உங்கள் வேலைக்கான சரியான திட்டமிடலுடன் தொடங்க வேலைகளில் வெற்றி கிடைக்கும். சிவாலயத்தில் பச்சரிசி தானம் செய்வது நல்லது. புதிய வண்டி வாகனங்கள், சொத்துக்களை வாங்குவதை ஒத்தி வைக்கலாம். பங்குச் சந்தை முதலீடுகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்றைய நாளில் சந்திர பகவான் ஏழாம் இடத்தில் இருப்பதால், காதல் வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இன்றைய நாளில் காதல் வாழ்க்கையில் நற்செய்திகள் காத்திருக்கிறது. குழந்தை பாக்கியம் எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று அலுவலகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உங்களுக்கு மனதில் சந்தோசமும், திருப்தியும் ஏற்படும். இன்று குடும்பத்தில் நீண்ட நாள் பிரச்சனைகள் தீர்ந்து சந்தோசம் உண்டாகும். நண்பர்களை சந்திப்பதும், கிழக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, விருந்துகளில் பங்கேற்பது என மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோகத்தில் புதிய வருமானம் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் பிசியாக இருப்பீர்கள்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு குதூகாலமான நாளாக அமைகிறது. குடும்ப பாரங்கள் தீரும்.சண்டை சச்சரவுகள் இல்லாத நாளாக அமைகிறது. எடுத்த காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். இன்று உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமும் உண்டாகும். மருத்துவ செலவுகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். பொருளாதார நிலை உயரும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று சகோதர, சகோதரிகளின் ஒற்றுமை மேம்படும். குடும்பத்தில் இருக்கக்கூடிய சொத்து தகராறுகள், நீண்ட காலமாக இருக்கும் வழக்குகள் போன்றவற்றில் இருந்து மூன்றாவது மனிதரின் தலையிட்டால் நல்ல செய்திகள் கிடைக்கும். பல மாதங்களாக இருக்கக்கூடிய பண பிரச்சினைகள் உங்களின் குடும்ப நண்பர்கள் மூலமாக கடன் தொல்லைகளுக்கு தீர்வு கிடைக்கும். குழந்தைகள் தொடர்பாக சில பிரச்சினைகள் சந்திக்க நேரிடும். மாணவர்களுக்கு போட்டிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.

Leave A Reply

Your email address will not be published.