தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 88

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளையும் முடிக்க கடினமாக உழைக்க வேண்டிய நாள். இன்று காய்ச்சல், தலைவலி போன்ற உடல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று திடீர் செலவுகள் உங்கள் நிதி நிலைமையை கஷ்டப்படுத்தும். அதன் காரணமாக இன்று செலவுகளை திட்டமிட்டு செய்யவும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று என் லட்சியம் நிறைவேற கூடியதாக இருக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான நாள். பெற்றோரின் ஆசீர்வாதமும், சகோதரர்களின் ஆலோசனையும் கிடைக்கும்.

எந்த ஒரு வேலையிலும் உங்கள் துணை என் ஆலோசனையை பெற்றிட தவறாதீர்கள். இன்று உங்களின் வேலைகள் சிறப்பான வெற்றி பெறும். பிள்ளைகளின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும். இன்று நாள் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டம தினமாக. பணியிடத்தில் சில முக்கிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு தேவைப்படும். சிறு வணிகர்கள் நீதி பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும். இன்று உங்களின் துணை ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாலை நேரத்தில் உங்கள் உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சந்திராஷ்டம தினமாக அமைகிறது.இன்று உங்களின் பேச்சை மற்றும் செயலில் கவனம் தேவை. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உங்கள் இனி பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். பிள்ளைகளின் விசயத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் அடைவீர்கள். படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பலவிதத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தந்தை மற்றும் பெரியவர்களின் நல்ல ஆலோசனை பரிசீலிப்பது அவசியம்.உங்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரும். நிதிநிலை வலுப்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று விசேஷமான நாளாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் மற்றும் சொத்து சார்ந்த தகராறு போன்றவற்றில் ஜாதகம் முடிவை நீங்கள் காணலாம் .குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்க வாய்ப்பு கிடைக்கும். இன்று விருந்து, விழாக்கள் ஏற்பாடு செய்ய வாய்ப்புள்ளது. இன்று எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் செய்து முடிக்க சாதகமான சூழ்நிலை கிடைக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வண்டி, வாகன பயன்பாட்டில் கவனமாக இருக்கவும். இன்று உங்களின் கவனக்குறைவால் காயம், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எச்சரிக்கை தேவை. அரசியலில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை பேசி தீர்க்க முடியும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். புதுமண தம்பதிகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணி சுமையை சந்திக்க நேரிடும். உங்கள் வேலையை செய்து முடிப்பதில் கூடுதல் கவனம் தேவை. பங்குச்சந்தை, முதலீடு போன்ற விஷயங்களில் கவனம் தேவை. என்று எந்த ஒரு பண பரிவர்த்தனை செய்வதிலும் கவனம் தேவை.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும். வீடு,மனை போன்றவை வாங்க நினைப்பவர்களின் முயற்சி நிறைவேறும். இன்று குடும்பத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சில் நிதானமும், பிரச்சனைகளை பேசி தீர்ப்பதாலும் மகிழ்ச்சியை மீட்டெடுக்கலாம். உங்களின் பிள்ளைகளின் செயல் மகிழ்ச்சி ஏற்படுத்தும்.உங்கள் துணையின் நல்ல ஆதரவு கிடைக்கும்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பரபரப்பான நாளாக அமையும். இன்று உங்களின் குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. என்று உங்களின் உணவு பழக்க வழக்கத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளவும். இன்று பெண்களின் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களின் எந்த ஒரு செயலுக்கும் வாழ்க்கைத் துணையின் நல்ல ஆலோசனை முன்னேற்றத்தை தருவதாக இருக்கும். உங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய நினைத்ததை விட அதிக செலவு ஆகும் .

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்களுக்கு கடினமான நாளாக அமையும். கல்வியில் ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். இன்று உங்களின் சுற்றத்தாருடன் அனுசரித்துச் செல்லவும். சட்டம் தொடர்பான விஷயங்களில் நிதானம் தேவை. உங்களின் பேச்சு மற்றவர்களை புண்படுத்தக்கூடியதாக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை.நீ எந்த குடும்ப பிரச்சினையையும் வாழ்க்கைத் துணையின் உதவியால் தீர்க்கப்படும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று மனப்பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உங்கள் தொழில் கவனம் தேவை. உங்களிடம் பணிபுரிபவர்களால் சிக்கல்களை சந்திக்க நேரிடும். எந்த ஒரு சூழ்நிலையிலும் கோபப்படாமல் சூழலை கையாளவும். குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும். நிதானமாக ஆலோசித்து முடிவுகளை எடுக்கவும். இன்று எதிர்காலம் குறித்து அதிகம் கவலைப்படுவீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.