தமிழ் ஓசை
தமிழ் ஓசை

2023 உலகக் கிண்ணப் போட்டி : மழைக்காரணமாகத் தடைப்பட்ட போட்டி மீண்டும் ஆரம்பம்

0 77

இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 2-வது அரையிறுதி போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3-ம் இடங்களை பிடித்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இதில் நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி துடுப்பெடுப்பை தெரிவுசெய்ததன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிகாக் மற்றும் பவுமா ஆகியோர் களமிறங்கினர். பவுமா முதல் ஓவரிலேயே 0 ஓட்டங்களில்  ஆட்டமிழந்தார். இதனையடுத்து ராஸ்ஸி வான் டெர் டுசென்- டிகாக் பொறுமையாக விளையாடினர்.

14 பந்துகள் சந்தித்த டிகாக் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க்ரம் 10 ஓட்டங்களிலும் பொறுமையாக விளையாடிய ராஸ்ஸி வான் டெர் டுசென் 31 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

11.5 ஓவர்களில் 24 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா அணி திணறி வருகிறது. தற்போது வரை தென் ஆப்பிரிக்கா அணி 14 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்களுடன் விளையாடி வருகிறது. மழையின் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.