தமிழ் ஓசை
தமிழ் ஓசை

2023 உலகக் கிண்ணப் போட்டி : இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்திய அணி

0 75

2023 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதலாவது அணியாக இந்திய அணி தெரிவாகியுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக   இடம்பெற்ற   அரையிறுதி போட்டியில் 70 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றள்ளது இந்திய அணி.

வங்கடே மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 397 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

398 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய  நியூசிலாந்து அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 327  ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

இதன்படி இந்திய அணி இந்த ஆண்டுக்கான உலக கிண்ண தொடரில் முதலாவது அணியாக இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

அதேநேரம் இன்று தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி இடம்பெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.