தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ரெடின் கிங்ஸ்லி மனைவி கழுத்தில் இரண்டு தாலி.. அதற்கு இப்படி ஒரு காரணமா? 🙄

0 208

அண்மையில் திருமணம் செய்த காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி நடிகை சங்கீதா கழுத்தில் இரண்டு தாலி இருக்கும் ரகசியம் குறித்து மேக்கப் செய்த பெண் சில ரகசியங்களை வெளியிட்டுள்ளார்.

ரெடின் திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்று இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் நிலையில் தற்போது இவருடைய திருமண ரகசியங்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அதோடு ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.  தமிழ் சினிமாவில் மிக பிரபலமான காமெடி நடிகர் ஆக ரெடின் கிங்ஸிலி வலம் வருகிறார.

இவர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலமாக வெள்ளி திரையில் அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படத்திலும் கிங்ஸ்லி நடித்து இருந்தார். 

முதல் திரைப்படத்திற்கும் இரண்டாவது திரைப்படத்திற்கும் அதிகமான மாற்றங்கள் இருந்தது. ஆனாலும் இவருடைய காமெடி மற்றும் வித்தியாசமான பேச்சு வழக்கு பல தரப்பு ரசிகர்களை கவர்ந்திருந்தது. 

டாக்டர் திரைப்படத்தில் ஆக்சனுக்கு இணையான காமெடி காட்சிகள் இருந்தது, அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த திரைப்படத்தில் யோகி பாபுவை கிங்ஸ்லி ஓவர் டேக் செய்திருந்தார் என்றே சொல்லலாம். 

டாக்டர் படத்தையே தொடர்ந்து அண்ணாத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் அவர் 45 வயதிற்கு மேல் இப்போதுதான் திருமணம் செய்து இருக்கிறார். 

அவருடைய மனைவி வேறு யாரும் இல்லை மாஸ்டர் திரைப்பட நடிகை சங்கீதா தான். விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர்தான். மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு உதவி செய்ய வரும் மருத்துவராகவும், ஸ்ரீநாத்தின் மனைவியாகவும் மதி என்ற கேரக்டரில் சங்கீதா நடித்திருந்தார்.

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1—&client=ca-pub-1995356428580737&output=html&h=280&adk=3429935365&adf=932464871&pi=t.aa~a.1097654583~i.17~rp.4&w=730&fwrn=4&fwrnh=100&lmt=1702808513&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=3596706544&ad_type

மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சில நிமிடங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார். அதை தொடர்ந்து சுல்தான் திரைப்படத்திலும் வலிமை திரைப்படத்திலும் சங்கீதா நடித்திருந்தார். இந்த நிலையில் இவர்கள் திருமணம் மைசூரில் ஒரு படபிடிப்பு நடக்கும் இடத்தில் நடைபெற்று இருக்கிறது.

திரைப்படத்தில் பட குழுவினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் எல்லோரும் இது சூட்டிங் திருமணம் என்று நினைத்திருந்தனர். 

பிறகு சங்கீதாவிற்கு மேக்கப் போட்ட பெண் பேட்டி ஒன்றில் சில தகவல்களை தெரிவித்து இருக்கிறார். அதில் இருவரும் பிளான் செய்து திருமணத்தை செய்ததில்லை. அவருக்கு மைசூரில் படப்பிடிப்பு இருந்ததால் அந்த இடைவெளியில் தான் திருமணம் நடந்தது.

ரெடின் கிறிஸ்தவர் என்பதால் அந்த தாலியும், சங்கீதா இந்து என்பதால் அந்த தாலியும் சங்கீதா கழுத்தில் அணிந்து இருந்தார். இருமுறை படி திருமணம் நடைபெற்றதாகவும் முதலில் இந்து கோவிலுக்கு சென்றும், பிறகு சர்ச்சில் வைத்தும் இரண்டு முறைப்படி திருமணம் நடைபெற்று இருக்கிறது. சங்கீதா திருமண புகைப்படங்களை டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான சதீஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார்.

பிறகு தான் இவர்களுடைய திருமண விஷயம் பலருக்கும் தெரிந்தது. ஏற்கனவே புகழ் இதுபோலத்தான் இரண்டு முறையிலும் திருமணம் செய்திருந்தார். அதையே இப்போது ரெடின் கிங்ஸ்லியும் பாலோ செய்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.