தமிழ் ஓசை
தமிழ் ஓசை

‘ரத்தம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒரு நாள்’ பாடல் ரிலீஸ்

0 72

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’.இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘ரத்தம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒரு நாள்’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஏற்றத்தாழ்வு குறித்து உருவாகியுள்ள இந்த பாடலை தெருக்குரல் அறிவு எழுதி, பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.