தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மேற்கிந்திய தீவுகள் அணி நான்கு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

0 84

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி நான்கு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்றையதினம் மேற்கிந்திய தீவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் (Brian Lara Cricket Academy) ஆரம்பமாகிய குறித்த போட்டியில் நாணய சூழ்ச்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.

அதற்கமைய, மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் நிறைவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ஓட்டங்களை பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில்,ரோவ்மேன் பவல் (Rovman Powell) 48 ஓட்டங்களையும் நிக்கோலஸ் பூரன் (Nicholas Pooran) 41ஓட்டங்களையும் பிராண்டன் கிங் (Brandon King)28 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இந்தியா அணி சார்பில், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்

அதன்படி 150 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 20 ஓவர்களின் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை பெற்றது.

இந்தியா அணி சார்பில் திலக் வர்மா (Tilak Varma) 39 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) 21 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) 19 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், ஜேசன் ஹோல்டர் (Jason Holder), ஓபேட் மெக்காய் (Obed McCoy) மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் (Romario Shepherd) ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.