தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மெனிங்கோகோகல் என்ற பற்றீரியா தொற்றால் இரு கைதிகள் உயிரிழப்பு

0 69

நேற்றைய தினம் (21) காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் உயிரிழந்தமைக்கு மெனிங்கோகோகல் என்ற பற்றீரியா தொற்றே காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த நோய் அறிகுறிகளுடன் இன்னும் 7 கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக  அறிக்கையைப் பெறவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் காலி சிறைச்சாலையில் தற்போது 1,023 கைதிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.