தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மாலைத்தீவு கடற்கரையில் ரஜினி

0 138

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது பிரேக் எடுக்கும் விதமாக மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் அவர் கூலாக சில் செய்யும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் 170-வது படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.