தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

0 95

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அணியின் தலைவர் Babar Azam அதிகபட்சமாக 50 ஓட்டங்களை பெற்றதுடன் Mohammad Rizwan 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Jasprit Bumrah, Mohammed Siraj, Hardik Pandya, Kuldeep Yadav, Ravindra Jadeja ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர்  192  ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 30.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியீட்டியது.

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 86 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன் Shreyas Iyer ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களை பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.