தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நடிகர் குமரிமுத்து கல்லறையில் செதுக்கப்பட்ட வாசகம்

0 564

தமிழ் திரையுலகில் ஒரு சமயம் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக இருந்தவர் குமரிமுத்து.

கிட்டத்தட்ட 1000 திரைப்படங்களில் நடித்துள்ள அவரின் அடையாளம் அந்த வித்தியாசமான சிரிப்பு தான். குமரிமுத்து கடந்த 2016-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார்.

இந்த நிலையில் குமரிமுத்துவின் கல்லறையில் எழுதப்பட்ட வாசகத்தின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அதன்படி நடிகர் குமரிமுத்துவின் கல்லறை வாசகத்தில் “Its Time For The GOD To Enjoy His LAUGHTER” என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அர்த்தம் என்னவெனில், எங்களை தேவையான அளவுக்கு சிரிக்க வைத்துவிட்டார், கடவுளே இது நீங்கள் எஞ்சாய் செய்ய வேண்டிய நேரம் என்பதாகும்.

Leave A Reply

Your email address will not be published.