தமிழ் ஓசை
தமிழ் ஓசை

திருட்டில் ஈடுபட்ட சகோதரர்கள் மூவர் கைது

0 604

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள், சுமார் 21 இலட்சம் பெறுமதியான திருட்டுப் பொருட்களுடன் அதுருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரகொட வீதி, அங்கொடை மற்றும் வெலிஹிந்த கடுவெல ஆகிய இடங்களில் வசிக்கும் 36, 32 மற்றும் 29 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு நீதிமன்றங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் மூவரையும் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.