தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 113

மேஷம்

மேஷம்

மேஷ ராசியினருக்கு வியாபாரம், தொழிலில் மேன்மைகளை அடைந்திட முடியும். அதில், சிறந்த லாபம் கிடைக்கும். உங்கள் வேலையில் சில மாற்றங்களைச் செய்ய சாதகமான நாள் அதில் வெற்றி பெறுவீர்கள்.

உங்களுக்கு சில புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். உங்கள் தந்தை, பெரியோரின் ஆசீ கிடைக்கும். அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இன்று மாலையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், உங்கள் தாயாரின் உடல் நலனில் அக்கறை கொள்ளவும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்களே, இன்று உங்கள் குடும்பத்திற்கு சாதகமான பலன்களை தரும். குடும்பத்தில் உள்ள ஒருவரின் திருமண குறித்து பேசுவீர்கள். உங்கள் சுகபோகத்திற்காக கொஞ்சம் பணம் செலவழிப்பீர்கள். பிள்ளைகளின் பிரச்சனைகளைத் தீர்க்க வாழ்க்கைத் துணையின் ஆதரவும், ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். இன்று உங்களுக்கு இனிமையான நாளாக இருக்கும்.

மிதுனம்

மிதுனம்

மிதுனத்திற்கு இன்று சுமாரான பலனைத் தரும் நாள். நீங்கள் புத்திசாலித்தனத்துடனும், விவேகத்துடனும் செயல்பட நீங்கள் வணிகத்தில் எடுக்கும் எந்த முடிவிலும் சிறப்பான பலனை அடைந்திட முடியும்.

இன்று, உங்கள் குடும்பத்தின் நல்லாதரவு கிடைக்கும்.
பணியிடத்தில் சிலரின் நம்பிக்கை இழக்க நேரிடும். சிலரின் நல்ல அறிவுரைகளை வருத்தப்படாமல் எடுத்துக் கொள்ளவும். இன்று மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், சகவாசமும் கிடைக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களே, இன்று உங்களுக்கு தொல்லை தரும் நாளாக இருக்கும். இன்று பணப்பற்றாக்குறையால் வியாபாரத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். கடக ராசிக்காரர்கள் இன்று உங்கள் சகோதர, சகோதரிகளின் உதவியை நாடலாம்.

வேலை, வியாபாரத்தில் சில எதிரிகள் தொந்தரவு செய்ய முயற்சிப்பார்கள். இருப்பினும் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற முடியும். இன்று உங்கள் வேலை தொடர்பாக பிஸியாக இருப்பீர்கள்

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு தொண்டு மனப்பான்மை பெருகும். இன்று வேலையில் அதிக அழுத்தம் இருக்கும் என்பதால் மும்முரமாக செயல்படுவீர்கள். உங்கள் குடும்பத்தினருக்காக நேரத்தை செலவிட முடியாமல் போகலாம்.

இன்று கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள். எந்த ஒரு புதிய திட்டமும் உங்களின் எதிர்காலத்தில் பயன் தருவதாக இருக்கும். இன்று உங்கள் பகைவர்களும் உங்களின் பலத்தைக் கண்டு சோர்வடைவார்கள். இன்று மாலை நேரத்தை ஆன்மிக சடங்குகளில் செலவிடுவீர்கள்.

கன்னி

கன்னி

இன்று உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். நீங்கள் உங்கள் பிள்ளைகளின் மூலம் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் தீரும். இன்று திருமணமானவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் நிதி நிலை குறித்து சற்று கவலை ஏற்படும்.

துலாம்

துலாம்

இந்த நாளில் உங்கள் கல்வியின் மீதான ஆர்வம் மேலும் அதிகரிக்கும், உங்களின் சில புதிய விஷயங்களை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். பகுதி நேர வேலை செய்ய நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

அரசு வேலையில் இருப்பவர்கள் இன்று தங்கள் பணியிடத்தில் கவனமாக வேலை செய்வது அவசியம். இன்று மாலை, உங்கள் பழைய நண்பரை சந்திக்க வாய்ப்புள்ளது. இன்று, காதல் வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும். வாழ்க்கைத் துணையின் மீதான காதல் தீவிரமடையும்.

விருச்சிகம்

விருச்சிகம்

இன்று உங்களுக்கு செலவுகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் வணிகத்தில் வருமானம் குறைவாகவும், செலவுகள் அதிகமாகவும் இருக்கும். இதனால் கொஞ்சம் கவலைப்படுவீர்கள். இருப்பினும் உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

இன்று குழந்தையின் முன்னேற்றத்தைக் கண்டு உங்கள் மனம் மகிழ்ச்சி அடையும். பணியிடத்தில், உங்கள் எதிரிகளை கவனமாக கையாளவும். இன்று வெளியூர், வெளிநாட்டிலிருந்து சில முக்கிய தகவல், நல்ல செய்தியைப் பெறுவீர்கள். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு

தனுசு

தனுசு ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். இன்று உங்கள் மனைவியுடன் மனவருத்தம் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கான உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்கள் தன் பங்குதாரரை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். எந்த பிரச்னையையும் பேசி தீர்க்க வேண்டும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று உங்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் பெறுவீர்கள். சில பூர்வீக சொத்துக்களைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். இருப்பினும் எந்த ஒரு முக்கிய செயலை செய்வதிலும் சரியான ஆலோசனையைப் பெற்ற பின்னர் செய்வது நல்லது. இன்று, உங்கள் குழந்தையின் எதிர்காலம் தொடர்பான எந்த முடிவை எடுப்பதிலும் கவனம் தேவை.
இன்று ஆன்மிகத்தின் மீது நாட்டமும், கோவிலுக்கு செல்ல மனம் ஏங்கும். உங்கள் தொழிலில் நீண்ட தூர பயணம் செல்ல நேரிடலாம்.

கும்பம்

கும்பம்

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீங்கள் ஒரு புதிய வேலையில் சேர, புதிய விஷயங்களை செய்ய திட்டமிட உங்களுக்கு சிறப்பான நாள். இன்று சில புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். அதே சமயம் உங்கள் செலவும் ஏற்பட வாய்ப்புள்ளது. கடன் கொடுக்க, வாங்க சாதகமான நாள் இல்லை. நிதி சார்ந்த சில சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். உங்களின் எரிச்சல் குணத்தால் சில சங்கடம் ஏற்படலாம்.

மீனம்

மீனம்

இன்று தாய் வழியிலும் கொஞ்சம் மரியாதை, உதவி கிடைக்கும். மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களிடம் முழு விசுவாசத்தையும், அர்ப்பணிப்பையும் வைத்திருப்பார்கள். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் உணவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். இன்று உத்தியோகத்தில் சில எதிரிகளின் தொல்லை ஏற்படலம. எந்த விஷயத்திலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பேச்சில் இனிமை தேவை.

Leave A Reply

Your email address will not be published.