தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 106

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் குடும்ப வாழ்க்கையில் சில ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்களுடன் சொத்து சம்பந்தமான தகராறுகள் மனக்கவலையைத் தரும்.இன்று நீங்கள் முதலீடு செய்ய சாதகமான அண்ணன். அதன் மூலம் எதிர்காலத்தில் முழு பலனை பெறலாம். குடும்ப உறுப்பினர்களுடன் சில சுபா நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் உண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் எந்த வித வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம். இன்று உங்களின் தந்தையின் உடல்நிலை குறித்து கவனமாக இருக்கவும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சுமாரான நாளாக அமையும். உங்களின் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். தந்தையுடனான உறவு மேம்படும். தந்தையின் சில முக்கிய ஆலோசனைகள் உங்களுக்கு உதவும்.பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் மனம் தொண்டு செய்யும் வேலைகளில் ஈடுபடும். இன்று முடிந்தால் ஏழை எளியோருக்கான சேவைகளிலும், அதற்காக பணத்தை செலவிடவும் முயலவும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மாலை நேரத்தில் இல்ல நல்ல செய்திகள் தேடி வரும். இன்று நிதி நிலையை பெருக்க நினைப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாளும் முழுவதும் உங்களுக்கு சந்திராஷ்டம தினமாக அமைகிறது. மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டம தினமாக அமைவதால் நீங்கள் எடுக்கக்கூடிய வேலைகளில் கூடுதல் கவனம் தேவை. உங்களின் பேச்சில் கனிவு அவசியம்.

சரியான திட்டம் அவர்களுடன் செயல்பட்டால் தொழிலில் நல்ல லாபத்தை சம்பாதிக்க முடியும். பொருளாதார நிலையை வலுப்படுத்தலாம். மாணவர்கள் நல்ல பலனை அடைய கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். இன்று உங்களின் ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களில் கவனம் தேவை.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். சில வேலைகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். அரசு சார்ந்த வேலைகள் சாதகமாக முடியும். வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று குடும்பத்தின் தேவைக்காக அதிக செலவுகள் ஏற்படும். வருமானத்தை மனதில் வைத்துக் கொண்டு செலவுகளை செய்வோம். இன்று சில நிதி சிக்கல்களை சந்திக்க வேண்டியது இருக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். இல்லையெனில் சில சச்சரவுகளைச் சந்திக்க நேரிடும். உங்களின் முன்னேற்றத்தைத் தடுக்க வாய்ப்புள்ளது. உங்களை புகழ்ந்து பேசக்கூடிய நபர்களிடம் கவனமாக இருக்கவும். இன்று குடும்பத்தில் சில மன வருத்தங்கள் ஏற்படும். என்று ஒரு விஷயத்தை பேசி தீர்த்துக் கொள்ளவும். பிள்ளைகளின் படிப்பு சார்ந்த விஷயத்தில் வெற்றி கிடைக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும். மாணவர்கள் கல்வியில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குழந்தைகளுக்காக பண முதலீடு செய்ய யோசிப்பீர்கள். கடினமான சூழ்நிலையில் உங்களின் வாழ்க்கை துணையின் ஆலோசனையை பெற தவறாதீர்கள். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரம் அமையும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று கோயிலுக்கு செல்லுதல், குருமார்கள் வழிபாடு செய்தல் போன்ற விஷயங்களில் ஈடுபடுவீர்கள். என்று உங்களின் பயணங்களில் கவனமாக இருக்கவும். உங்களுக்கு பிடித்த பொருள் இழக்க நேரிடலாம். இன்று நீங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் அதில் உங்களுக்கு ஏதோ ஒரு மன பயம் இருக்கும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்திலும், பணியிடத்திலும் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இன்று சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். அதில் உங்களின் உணர்ச்சிகளை ஒதுக்க வைத்து விட்டு யோசிக்கவும். உடன்பிறந்தவர்களுடன் மனம் வருத்தம் ஏற்படும். பங்குச் சந்தை முதலீடுகளும் சற்று நஷ்டத்தை தர வாய்ப்புள்ளது என்பதால். இன்று முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று சொத்துக்களை பெற்ற மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களின் பேச்சில் கவனம் தேவை. இல்லை எனில் தேவையற்ற மன வருத்தம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் சில ஏமாற்றமான செய்திகளை கேட்டு கவலை அடைவீர்கள். சொத்து சார்ந்த விஷயங்களில் விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் பற்றி கவனமாக இருக்கவும்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சற்று மன உளைச்சல் தரக்கூடியதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாட்டால் உறவில் விரிசல் ஏற்படும். அதன் காரணமாக இன்று உங்களின் பேச்சு குறைத்துக் கொள்வதும், அமைதியை காப்பது நல்லது. அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. வேலை செய்பவர்கள் வேறு சில புதிய வாய்ப்புகளை பெறலாம்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு சாதகமான நாடாக அமையும். சில வருமான ஆதாரங்கள் கிடைக்கும். இன்று உங்களின் வருமானத்தை இரட்டிப்பாகும் வாய்ப்புகள் உண்டு. இன்று சில புதிய எதிரிகள் உருவாக வாய்ப்புள்ளது. அதனால் எச்சரிக்கையுடன் உங்களின் வேலைகளில் ஈடுபடவும். உங்கள் குழந்தைகள் தொடர்பாக சில செலவுகள் அதிகரிக்கும். இன்று முன்னேற்றமும், பொருளாதாரங்களையும் முன்னேற புதிய திட்டங்களை செயல்படுத்த நற்பலன்கள் கிடைக்கும்.

Leave A Reply

Your email address will not be published.