தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 95

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் நிதி நிலைமை மேம்படும். பல வகையில் உங்களின் வருமானம் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதே சமயம் குடும்ப உறுப்பினர்களுக்காக அதிக செலவுகள் செய்ய வேண்டியதும் இருக்கும். பணத்தை மிகவும் சிந்தனையுடன் செலவிடவும். தொழில், வியாபாரத்தில் பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். இன்று உங்களின் செயல்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலை வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான நல்வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் நிதி நிலைமை பலப்படும். உங்களின் நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். இன்று சிலரின் பேச்சு உங்களின் மனதை புண்படுத்துவதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு உடல்நல பிரச்சனை யாரும் மனக்கவலை அடைவீர்கள்.​

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் உங்களின் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள். போட்டியில் நல்ல வெற்றி கிடைக்கும். கல்வித்துறை சார்ந்த சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதல் வாழ்க்கையில் துணையின் அன்பும், அனுசரணையும் கிடைக்கும். என்று எதிர்காலத்திற்கான முதலீடுகள் செய்வதில், நிதானமாகவும், திட்டங்களை ரகசியமாகவும் வைத்திருக்கவும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தகராறு ஏற்படலாம். உங்கள் பேச்சு செயலில் கவனம் தேவை.​

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று தொழில், வணிகம் தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் செல்வ நிலை அதிகரிக்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். பெற்றோருடன் நேரத்தை செலவிடவும் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி, கௌரவம் கிடைக்கும். மாணவர்களுக்கு அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். சிலருக்கு வேலை நிமித்தமான பயணங்கள் மேற்கொள்ள நேரிடும்.​

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அரசு துறையில் உள்ளவர்கள் கவனமாக வேலை செய்யவும். இல்லையெனில் மேலதிகாரிகளின் கோபத்தை சந்திக்க நேரிடும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் நல்ல ஆதரவு கிடைக்கும். காதலிப்பவர்கள் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறலாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படவும். உங்கள் பங்குதாரர்களுடன் அனுசரித்துச் செல்லவும்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வணிகஸ்தர்கள் எந்த வேலை செய்தாலும் அதில் நல்ல வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு பருவ கால நோய்கள் பிரச்சனையை தரலாம். என்று உங்களின் உணவு பழக்க வழக்கத்தைக் கட்டுப்படுத்தவும். குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக நிகழ்வில் பங்கேற்க வாய்ப்புகள் கிடைக்கும். இன்று வீடு, நிலம் தொடர்பாக முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும்.​

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு மற்ற நாட்களை விட இன்று மிகவும் சிறப்பானதாக இருக்கும். உங்கள் முயற்சிகளில் வேகம் அதிகரிக்கும். அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட வாய்ப்புள்ளது. இன்று தாயின் உடல்நிலையில் கவனமாக இருக்கவும். ருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழிலில் திட்டங்கள் சாதகமான பலனைத் தரும். இன்று கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உங்கள் பயணத்தின் போது மதிப்பும் மிக்க பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். எந்த ஒரு செயலிலும் கவனமாக செயல்படுவது நல்லது. இன்று உங்களின் செலவுகள் அதிகமாக இருக்கும். சிந்தித்து செயல்படவும். பணம் தொடர்பாக சற்று அலைக்கழிக்கப்படலாம். வெளிநாடு தொடர்பான வேலை அல்லது வியாபாரத்தில் எதிர்பார்த்திருந்த சில நல்ல செய்திகள் கிடைக்கும்..

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பேச்சில் மென்மையை கடைப்பிடிக்கவும். உங்களின் வேலை, வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சிறப்பாக பலன்களை பெறலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும். இன்று நண்பர்களை சந்திக்கவும், அவர்களுடன் விருந்தில் கலந்து கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் அவர்கள் நினைத்த வேலையை முடிப்பதில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான நேரம் அல்ல. குடும்ப உறுப்பினரின் திருமணம் தொடர்பான விஷயங்களில் நல்ல செய்திகள் கிடைக்கும். இன்று பெற்றோருடன் நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் இன்று படிப்பில் கவனமும், கடின உழைப்பும் தேவை.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கோபத்தையும், பேச்சையும் கட்டுப்படுத்தவும். உங்களின் குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவது தொடர்பான செயல்களை வெற்றி பெறுவீர்கள். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். குடும்ப உறுப்பினர்களுடன் சில முக்கிய பிரச்சினைகளை விவாதிப்பீர்கள். என்று உங்களின் தொழில், வியாபாரம் தொடர்பாக மற்றவர்களின் கட்டாயத்தின் பேரில், அழுத்தத்தால் எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுக்க வேண்டாம்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக சில வேலைகளை முடிப்பதில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உங்களின் சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். இன்று சற்று அலைச்சல் அதிகமான நாளாகவே இருக்கும். சிலருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

Leave A Reply

Your email address will not be published.