தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 99

மேஷம்

மேஷம் இன்றைய ராசி பலன் - Aries

இன்று, மேஷ ராசிக்காரர்கள் எதிலும் பொறுமை தேவை. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் ஒருங்கிணைப்பைப் பேண வேண்டும். குழுவாக செய்யக்கூடிய பணியில் வெற்றி அடைய முடியும். உங்கள் அனுபவம் வாய்ந்த நபர்களின் வழிகாட்டுதலால் உத்வேகத்தைப் பெறுவீர்கள்.

பணியிடத்தில் வெற்றியால் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். மாலையில் நீண்ட தூர பயணமும் செல்ல வாய்ப்புள்ளது. உங்களுக்கு நீண்ட நாட்களாக சொத்து சம்பந்தமான தகராறு இன்று முடிவுக்கு வரும்.

ரிஷபம்

ரிஷபம் இன்றைய ராசி பலன் - Taurus

ரிஷபம் ராசிக்காரர்கள் எந்த வேலையைச் செய்தாலும், அதை முழு ஆர்வத்துடன் செய்வீர்கள். எல்லா வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

தடைகளும் நீங்கும். இன்று உங்கள் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காகக் கொஞ்சம் பணம் செலவழிப்பீர்கள். உங்கள் நிதி நிலைமையை மனதில் வைத்து அதைச் செலவிட வேண்டும், இன்று மாலை சில புதிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள்.​

மிதுனம்

மிதுனம்  இன்றைய ராசி பலன் - Gemini

இன்று மிதுனம் ராசிக்காரர்கள் வேலையை முடிக்க கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வெற்றியால் மனம் திருப்திகரமாக இருக்கும். இன்று ஏதேனும் புதிய வேலையைச் செய்ய நினைத்தால், இன்றே அதைத் தள்ளி வைப்பது நல்லது. செய்யும் வேலையில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்திலும் மற்றும் வேலையிலும் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் அது உங்கள் உறவை சிக்கலில் தள்ளும். புதிதாக முதலீடு செய்ய நினைத்தால், அதை தவிர்க்கவும்.

கடகம்

கடகம் இன்றைய ராசி பலன் - Cancer

இன்று, கடக ராசிக்காரர்கள் ஒரு ஆன்மிக ஸ்தலத்திற்குச் செல்ல திட்டமிடலாம். இன்று ஒரு புதிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் திட்டங்களை இன்று யாரிடமும் பகிர வேண்டாம். உங்களின் எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை. எதிரிகளில் தொல்லை இருக்கும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். இன்று கடக ராசிக்காரர்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் புத்திசாலித்தனம் மற்றும் அறிவுத்திறன் மூலம் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்.

சிம்மம்

சிம்மம் இன்றைய ராசி பலன் - Leo

நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டே சென்ற காரியங்கள் வெற்றியில் முடியும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய வாய்ப்பு உண்டு.
திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் நன்மையில் முடியும் பெண்களுக்கு நல்ல நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருந்துவரும் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவைகளில் தீர்வையும் உடனே ஈட்டுவீர்கள்.

கன்னி

கன்னி இன்றைய ராசி பலன் - Virgo

இன்று நீங்கள் சந்திரனின் அருள் பெறுவீர்கள். எனவே உங்களுக்கு பல யோக பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிக ஆற்றலுடனும் செயல்படுவதோடு, உங்கள் வேலையில் கவனம் செலுத்தி வேலையை செய்து முடிப்பீர்கள்.

உங்கள் கடின உழைப்பு காரணமாக பல வெற்றிகளைப் பெறுவீர்கள். இதன் மூலம் நல்ல தன வரவு பெற வாய்ப்புள்ளது. உங்கள் சகாக்கள் உங்களுக்கு உதவக்கூடும். சிலர் வேலை தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. உங்கள் உடன்பிறந்தவரிடமிருந்து சில நல்ல செய்திகள் வரக்கூடும்.

துலாம்

துலாம் இன்றைய ராசி பலன் - Libra

நண்பர்களுக்கு பல நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கும். நாளாகும். புதிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கக் கூடும். பிரயாணங்களை பற்றி சிந்திப்பீர்கள். கல்வியில் மேன்மையான நிலையை மாணவர்கள் அடைவார்கள். உயர் கல்வியை நோக்கி முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்

வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருப்பவர்கள் வெற்றியடைவார்கள். உத்தியோகத்தி​ல் நல்ல முன்னேற்றம் காணும் நாளாக அமையும்.

விருச்சிகம்

விருச்சிகம் இன்றைய ராசி பலன் - Scorpio

இவ்வளவு நாட்களாகச் சமாளித்து வந்த பல தொல்லைகளுக்கு முடிந்து முடிவுக்கு வந்துவிடும். படிப்பை முடித்து வேலையை எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பதற்கு ஓரிரு நாட்கள் தாமதம் ஆகலாம்.

பல நாட்களாக முடிவடையாத முக்கியமான வேலைகள் அனைத்தையும் முடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்

தனுசு

தனுசு இன்றைய ராசி பலன் - Sagittarius

இன்று உங்கள் வேலையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகச் சிறப்பானதாகச் செல்லக் கூடும். மாலையில் சில இடங்களிலிருந்து உங்களுக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும்.

இன்று நீங்கள் மந்தமாக உணரலாம், இனம் புரியாத சில பயம் உங்களை வருத்தம் தரக்கூடும். மன அழுத்தம் உங்கள் தூக்கத்தை பாதிக்கும். தியானம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

மகரம்

மகரம் இன்றைய ராசி பலன் - Capricorn

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பண வரவு சீராகவும், குடும்பத்திற்கு தேவையான செலவை செய்வீர்கள். துணையுடன் இருந்த கருத்து மோதல் நீங்கி அன்பு அதிகரிக்கும்.
கல்வியில் மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள் பல காலமாக வெளிநாடுகளில் வசித்துக் கொண்டிருப்பவர்கள் தாய் நாட்டை நோக்கி திரும்ப வாய்ப்பு உள்ளது.

கும்பம்

கும்பம் இன்றைய ராசி பலன் - Aquarius

இன்று குழந்தைகளுடன் வீட்டில் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது. குழந்தைகளின் கல்வியைப் பொறுத்தவரை சில நல்ல செய்திகளை நீங்கள் பெறமுடியும். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு உயரும்.

வீடு அல்லது அலுவலகத்திற்கு சில தேவையான பொருட்களை வாங்கலாம். பொருட்களை வாங்கும்போது செலவில் சற்று கவனமாக இருப்பதும் அவசியம். இராணுவம், மேலாண்மை, மின்னணுவியல், மருத்துவம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறப்பான பலன் கிடைக்கும்.

மீனம்

மீனம் இன்றைய ராசி பலன் - Pisces

​ஒரு சிலருக்கு இடமாற்றம் அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்பு போன்றவை கிடைக்கும். கல்வியை முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இடமாற்றம் ஏற்படும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளவும் சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான செயல்களில் இருப்பவர்களுக்கு தங்களுடைய காரியங்கள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.