தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 100

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பரணி, கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷமம இருப்பதால் நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முயற்சிகளிலும் எச்சரிக்கை தேவை. எந்த ஒரு புது முயற்சிகளையும் இன்று நீங்கள் எடுக்க வேண்டாம். அலுவலகம், குடும்பம் சார்ந்த விஷயங்களில் ஒற்றுமை இருக்கும். வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மனக்குழப்பங்கள் தீர ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நன்மை தரும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். 6ம் இடத்தில் இருக்கக்கூடிய சந்திரன் மற்றும் புதன் பகவானால் தனலாபங்கள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இன்று உங்கள் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பும், ஆலோசனையும் வெற்றியைத் தருவதாக இருக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனக்குழப்பங்கள் இருக்கக்கூடிய நாளாக இருந்தாலும், எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். பல மாதங்களாக இருந்த வேலை, குடும்பம் சார்ந்த குழப்பமான விஷயங்களில் பிரச்சினைகள் தீரும். இன்று அம்மன் ஆலய வழிபாடு சிறப்பான பலன் தரும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று பல மாதங்களுக்குப் பிறகு சந்திக்கக்கூடிய நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். சந்திரனின் சஞ்சாரம் புதனுடன் சேர்ந்து 4ம் இடத்தில் இருப்பதால் வீடு சம்பந்தப்பட்ட குழப்பங்கள் தீரும்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று குதூகலமான நாளாக அமைகிறது. எடுத்த காரியத்தில் வெற்றியும் உண்டு. மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேறும். காதலர்களுக்கு மிக சிறப்பான நாளாக அமைகிறது. விநாயகர் ஆலயத்தில் பாலபிஷேகம் செய்ய எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று சிறு பிரச்னைகள் வந்து செல்லும். பெரியளவில் பாதிப்புகள் எதுவும் இல்லை. இருப்பினும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில தடுமாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மாலை நேரத்தில் நல்ல செய்திகள் காத்திருக்கிறது.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்கள் ராசியிலேயே சந்திரன் இருப்பதால் மன தெளிவு இருக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சங்கடங்கள், குழப்பங்கள் எல்லாம் தீரக்கூடிய நாள். மன தெளிவு ஏற்படும் என்பதால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப நண்பர்களால் ஏற்படக்கூடிய சில நிகழ்வுகள் உங்களுக்கு மனக்குழப்பத்தை, மன வருத்தத்தைத் தரக்கூடியதாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விநாயகர் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் திருப்தியானதாக அமையும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை முயற்சிகளில் வெற்றி உண்டு. பல நாட்களாக வண்டி வாகனம் வாங்குவது, விற்பது தொடர்பான முயற்சிகளில் முடிவெடுக்கக்கூடிய நாளாக அமையும்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று அலுவலகம் சார்ந்த நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 10ம் இடத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் அலைச்சல் அதிகமாக இருக்கும். புதிய நண்பர்களை நம்ப வேண்டாம். எடுத்த காரியத்தில் வெற்றியும், மன அமைதியும் கிடைக்கும்.

​​

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தைகளால் பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு; அதனால் இன்று விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்யவும். காலை வேளையில் நல்ல செய்திகள் காத்திருக்கிறது. சிலருக்கு சுப விரயங்கள் ஏற்படும். சுப செலவுகள் மனதிற்கு ஆறுதலையும், சந்தோஷத்தையும் தரும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதிற்கு நிறைவான நாளாக அமையும். சகோதர, சகோதரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். பல நாட்களாக இருந்து வரக்கூடிய பணப்போராட்டம், பணத்தால் ஏற்படும் பிரச்னைகள் முடிவுக்கு வரக்கூடிய நாள். மனதிற்கு தைரியமும், உற்சாகமும் கிடைக்கும். இன்று விநாயகர் வழிபாடு செய்ய காரியங்கள் வெற்றி பெறும்.

Leave A Reply

Your email address will not be published.