தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 87

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் கல்வி தொடர்பான சிக்கல்கள் தீரும். போட்டித் தேர்வுக்கு தயாராக மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். குடும்பத்திலும் பணியிடத்திலும் கோபத்திலோ, அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். இது உங்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடும். வருமானத்திற்கும், செலவுக்கும் இடையே கட்டுப்படு தேவை. இன்று உங்களின் நிதி நிலை சீராக இருக்கும்.


ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் செயல்படுத்தக்கூடிய புதிய திட்டங்கள் மூலம் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்று பணியிடத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், சிக்கல்களை கவனமாக அணுகினால் எளிதாக தீர்க்க முடியும். குடும்பத்துடன் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. உங்களின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. இன்று நிதி ரீதியாக நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் நல்ல சாதகமான பலன் தரக்கூடியதாக இருக்கும்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நலம் முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் சக ஊழியர்களால் ஏமாற்றப்பட வாய்ப்புள்ளது. நிதிநிலை வலுவாக இருக்கும். கடன் திருப்பி செலுத்த முடியும். வேலை தேடும் முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

​​

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் இருப்பவர்களுக்கு மக்களின் நல்ல ஆதரவு கிடைக்கும். இன்று சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். செல்வாக்கு மிக்க நபர்களை சந்திக்கலாம். ஆடம்பர விஷயங்களுக்காக இன்று அதிகம் செலவிட வேண்டியது இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நெருங்கிய நண்பரை சந்திக்க முடியும்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உடன்பிறந்தவர்களுடன் இருக்கக்கூடிய தகராறு தீரும். அன்பு அதிகரிக்கும். உங்கள் தொழிலில் ஒருவரின் நல்ல ஆலோசனை கிடைக்கும். பணியிடத்தில் குழுவாக ஒரு வேலையை முடிக்க வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பணியில் அதிக ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். சத்து வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உங்களின் தாய் மீதான அன்பும், பாசமும் அதிகரிக்கும். இன்று உங்களின் சூழல் இனிமையானதாக இருக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள். அதில் வெற்றியும் கிடைக்கும்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் தொடர்பாக நீண்ட நாட்களாக முயன்று கொண்டிருந்த ஒரு ஒப்பந்தம் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். விருந்து விழாக்களில் பங்கேற்க வாய்ப்புள்ளது. உங்களின் சகோதரர்களின் ஆதரவால் நிதிநிலை மேம்படும். மனைவியுடன் உறவு நெருக்கமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் கவனம் தேவை.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் முயற்சிக்க கூடிய எந்த ஒரு வேலையும் நிச்சயம் நிறைவேறும். உங்களுக்கு பிடித்த வேலையை இன்று செய்ய வாய்ப்பு கிடைக்கும். மற்றவர்களுக்கு உங்கள் மீதான மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அனுபவம் உள்ளவரின் ஆலோசனை இன்று கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்ற முடியும்.

துலாம், விருச்சிகம் புரட்டாசி மாதம் நட்சத்திர பலன் 2023

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பழைய தடைப்பட்ட வேலைகளை முடிக்க முடியும். கடினமாக உழைக்க வேண்டிய நாளாக இருக்கும். மனைவியுடன் மகிழ்ச்சியாக நான் நேரத்தை கழிக்க முடியும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்கள் அனுபவிப்பீர்கள். வேலையில் வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று தொழில், வியா உங்களுடைய முயற்சிகளில் கவனம் தேவை. பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் சுணக்கம் இருக்கும். மற்றவர்கள் கொடுக்க வேண்டிய பணம் திரும்ப வரக்கூடிய வாய்ப்பு குறைவு. குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக பணம் முதலீடு செய்வீர்கள். உங்களின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கலாம். சில வேலைகளை முடிக்க அலைச்சல் அதிகமாக இருக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று அரசியலில் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். மக்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டிலும், வெளியிலும் உங்கள் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். உங்கள் புகழ் அதிகரிக்க கூடிய வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் தொடர்பு ஆன விஷயங்களில் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் செய்யக்கூடிய முதலீடு மூலம் முழுமையான பலனை அடைய முடியும். வேலையை சரியான நேரத்தில் செய்து முடிக்க முடியும். பணிபுரிபவர்களுக்கு சில முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். கல்வி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். உறவுகளின் ஆதரவு கிடைக்கும். தாய் வழி தரப்பிலிருந்து நிதி ஆதாயங்களை பெறுவீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.