தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 104

மேஷம்

நேயர்களுக்கு இன்றைய நாள் மிகச்சிறந்த முன்னேற்றத்தைக் கொடுக்கும் நாளாக இருக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி அடைவீர்கள். வழக்கு பிரச்சினைகள் போன்றவற்றில் வெற்றி உண்டாகும்

பொருளாதார முன்னேற்றம் நன்றாக இருந்து வரும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தங்கள் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் ஒற்றுமை ஏற்படும்.

ரிஷபம்

எந்த ஒரு செயலிலும் கவனம் தேவை. சொந்த தொழில் செய்பவர்கள் பல புதிய தொழில் வாய்ப்புகளை காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெற்றிகரமான நாள் ஆகும்.

காதல் வலையில் விழுந்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகளும் சந்திப்புகளும் இருக்கும். பெண்களுக்கு ஏற்ற மிகுந்த நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும் பெண்களுக்கான தொழில் முயற்சிகள் வெற்றியில் முடியும். வாகன வகையில் முதலீடு செய்வதற்கு ஏற்ற நாள் ஆகும்.

மிதுனம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். நீங்கள் எடுக்கின்ற எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும் பிற்பகலுக்கு மேல் உடல் அசதி ஏற்பட வாய்ப்பு உண்டு. வீண் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ளவும் எதிர்பார தனவரவு உண்டாகும்.

உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பு உள்ளது உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றமும் உண்டாக வாய்ப்பு நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.

கடகம்

இன்று தொழிலில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். இருப்பினும் புத்துணர்வுடன் வேலையை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் பெறுவீர்கள். நேர்மறையான எண்ணங்களால் வளர்ச்சி உண்டாகும்.

புதிய கல்வி வாய்ப்புகளைப் பெறுவார்கள். வெளிநாடுகளில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வெற்றிகரமான நாள் ஆகும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.

சிம்மம்

ராசிக்கு எதிர்மறை எண்ணங்கள் தோன்ற வாய்ப்புள்ளது. அதனால் எந்த ஒரு முடிவை எடுத்தாலும் கவனம் தேவை. முடிந்தால் முக்கிய முடிவுகளை எடுக்காமல் தள்ளி வைப்பது அவசியம்.

நிதி நிலைமை சற்று கவனமுடன் இருப்பது நல்லது. திடீர் செலவு அல்லது தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு வயிறு சார்ந்த கோளாறு ஏற்படக்கூடும். உடல் நலனில் கவனம் தேவை. வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி இருக்கும். சமூகத்திலும், குடும்பத்திலும் உங்கள் மீதான மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

கன்னி

வீண் அலைச்சல்களைத் தவிர்த்துக் கொள்வது உங்களை சோர்வடைவதிலிருந்து காத்துக் கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை

கல்லூரிகளில் இடத்தை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு கிடைக்கக்கூடும். புதிய தொழில் முயற்சிகள் மேலும் சிறிதளவு காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிலையை காண்பார்கள். நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்ளும் நாளாக அமையும்.

துலாம்

நேயர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும்

வயதானவர்களுக்குத் தோள்பட்டை மற்றும் இடுப்பு கால் பகுதிகளில் வலி ஏற்பட்டு விலகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் கல்வியில் உன்னதமான நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும்

விருச்சிகம்

நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு எண்ணம் அதிகரிக்கும். நாளைய திட்டங்கள் குறித்து இன்றே முடிவெடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள்.

வேலையில் உங்களின் திறமையை வெளிப்படுத்தி நற்பெயர் பெறுவதோடு, புதிய வாய்ப்புக்களைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. முக்கிய முடிவுகளை எளிதாக எடுப்பீர்கள். அதனால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

தனுசு

கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தனலாபம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சியும் தனவரவும் உண்டாக வாய்ப்பு உண்டு. புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வெளியூர் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

ஒரு சிலருக்கு உத்தியோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும் உயர்நிலைக் கல்வி பயில்பவர்கள் நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும்.

மகரம்

வயோதிகர்களுக்கு சற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு விலகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும். விநாயகப் பெருமான் வழிபாடு விக்கினம் தீர்க்கும்.

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் நன்மையில் முடியும். குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பெண்களுக்கு இனிமையான நாளாகும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு ஆடை ஆபரணம் அணிகலன் சேர்க்கைக்கு வழி இருக்கிறது.

கும்பம்

தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் முற்பகலில் வெற்றி அடையும் பிற்பகலில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு குடும்பத்தில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது பேச்சில் கவனம் தேவை குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் கல்வியில் முன்னேற்றம் உண்டு

புதிய கல்லூரி சேர்க்கைகள் விரும்பியவாறு கிடைக்க ஏதுவான நாளாக இன்றைய நாள் அமைகிறது. மருந்து மருத்துவம் ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நாளின் பிற்பகுதி நன்றாக இருக்கும் பெண்களுக்கு நல்லதொரு நாளாகும்.

மீனம்

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தன வரவு நன்றாக இருக்கும். புது தொழில் முயற்சிகள் தொடர்பான திட்டமிடுதல் மனதில் ஏற்படும்.

திருமண முயற்சிகள் வெற்றியடையும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான வகைகளில் ஆதாயம் அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வி சிறப்பாக இருந்து வரும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.