தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன் 

0 99

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்ப ஒற்றுமை மேம்படும்.இன்று உங்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். எதிர்மறையான சிந்தனையை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். அதனை பயன்படுத்திக் கொள்ளவும். இன்று எதிர்காலத்தை மனதில் வைத்து புதிய விஷயங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
சந்திரன் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் பெருமாள் ஆலய வழிபாடு நற்பலனைத் தரும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் சக ஊழியரின் செயல்பாடு மன வருத்தத்தைத் தரும். அதனால் மனம் சற்று கவலையுடன் இருக்கும். இன்று அமைதியாகவும், நிதானமாகவும் எந்த ஒரு காரியத்தையும் செய்ய வெற்றி உண்டாகும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள்.​

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசியிலேயே சந்திர பகவான் சஞ்சாரம் செய்கிறார். இன்று நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ அந்த அளவிற்கு நல்ல லாபத்தை பெற்றிட முடியும். உங்கள் பணத்தை புதிய விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் அமைதியாக பேசிய தீர்த்துக் கொள்ளவும். இன்று உங்களின் பிள்ளைகளின் கல்வி தொடர்பாக கவனமாக சிந்தித்து முடிவெடுங்கள்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் பொருள் வசதிகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். உங்களின் நண்பர்களின் வட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விவேகத்துடன் எடுக்கக்கூடிய முடிவுகள் நல்ல ஆதாயத்தைத் தரும். இன்று ஆடம்பரத்திற்காக அதிக பணத்தை வீணடிக்க வேண்டாம். வருமானம் மற்றும் செலவு இடையே சமநிலையைப் பராமரிக்கவும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சில மதிப்பு மிக்க பொருட்களை வாங்குவீர்கள் அல்லது கிடைக்கும். அது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த பழைய நண்பரைச் சந்திப்பீர்கள். இன்று ஏழைகளுக்கு உதவுதல் போன்ற நல்ல எண்ணங்கள் உண்டாகும்.
உங்களின் திறமையை வெளிப்படுத்தக்கூடிய நாளாக இருக்கும். அதன் மூலம் வெற்றியையும், மற்றவர்களை உங்கள் பக்கம் இருப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சில தடைகளை சந்திக்க நேரிடும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சொந்தங்கள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதில் நல்ல வெற்றியைப் பெற்றிட முடியும். உத்தியோகஸ்தர்களுக்குச் சாதகமான நாளாக இருக்கும். என்று உங்களுக்கு பிடித்தமான வேலையை செய்ய வாய்ப்புள்ளது. இன்று உங்களின் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலைவாய்ப்பு கிடைத்தல் போன்ற மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும். உங்களின் தைரியம் மற்றும் செயல்பாடு பணியிடத்தில் பாராட்டப்பட வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உடல் நல பிரச்சினைகளை மருத்துவ ஆலோசனையில் தீர்வு காணவும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். உங்களின் செயல்பாட்டால் குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிக்க வாய்ப்புள்ள நாள்.
இன்று கடன் கொடுப்பது, வாங்குவது தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் சிக்கி உள்ள பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் வேலைகளில் சரியான திட்டமிடல் தேவை.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் சில புதிய வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் கிடைக்கும். என்று யாருக்காவது கடன் கிடைத்து இருந்தால் அது திரும்ப பெற சாதகமான நாள். உங்களின் நிதிநிலை பலப்படுத்தக்கூடிய நாள்.
இன்று உங்களின் பேச்சில் இனிமையை பராமரிக்க வேண்டியது அவசியம் இல்லையெனில் உறவில் விரிசல் ஏற்படலாம்.

மகரம் ராசி பலன

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் சிறப்பான பலன்களை பெற்றிடுவீர்கள். இன்று வெளியூர் பயணம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை பெற்று தந்திடும். வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதில் வெற்றி அடைவீர்கள். முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். இன்று குடும்பத்திலும், பணியிடத்திலும் அனுசரித்துச் சென்றால் சுமூகமான நாளாக இருக்கும்,

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் எதிர்காலத்திற்கான புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். மூத்தவர்களின் நல்ல ஆலோசனை கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் விருந்து விழாக்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. சிறு வணிகர்கள் பண பற்றாக்குறை சந்திக்க நேரிடும். மாணவர்கள் கவனமாக படிக்க வேண்டிய நாள். இன்று எந்த சூழ்நிலையிலும் உங்கள் துணையின் முழு ஆதரவை பெறுவீர்கள்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று மனம் கொஞ்சம் கலக்க நிலையிலேயே இருக்கும். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு உங்களின் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம் . இது எதிர்காலத்தில் பெரிய சிக்கலை உண்டாக்கும். திருமணம் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும். இன்று அதிக பணம் செலவழிக்க வேண்டிய நாளாக இருக்கும்.

Leave A Reply

Your email address will not be published.