தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 103

மேஷம்

மேஷம்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தன லாபங்கள் உண்டு. பங்குசந்தை முதலீடு செய்ய எண்ணம் கொண்டவர்கள் இந்த நாளை தேர்ந்தெடுக்கலாம். குடும்ப ஒற்றுமை, அலுவலகம் சார்ந்த விஷயங்களில் ஒத்துழைப்பும், மன நிம்மதியும் இருக்கும். இன்று நல்ல செய்திகளும் காத்திருக்கிறது.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குதூகலமான நாளாக இருக்கும். நண்பர்களுடன் கேளிக்கை, விருந்து போன்ற விஷயங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். இன்று பெண்களுக்கு குறிப்பாக கிருத்திகை நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். சிலருக்கு சுப செலவுகள் காத்திருக்கிறது.
இன்று கிருஷ்ணர் வழிபாடு செய்வது நல்லது.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சிறப்பான நாளாக இருக்கு. நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்திக்கக்கூடிய குடும்ப உறவினர்கள் மூலமாக சில சுப விரய செலவுகள் ஏற்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பது, அலுவலகம் சார்ந்த முக்கிய வேலைகளில் முடிவு எடுப்பது ஒத்திப் போடலாம். இன்று வாகனம் வாங்குதல், விற்பது தொடர்பாக முடிவுகளை எடுக்கலாம்.
இன்று விநாயகருக்குப் பாலபிஷேகம் செய்யலாம்.

கடகம்

கடகம்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு உற்சாகம் தரக்கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒன்று சேர்த்தல், குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கும் பிள்ளைகள் மீண்டும், பெற்றோருடன் சேருதல் போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும்.இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
முருகப்பெருமான் வழிபாடு செய்வது நல்லது.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்களுக்கு மனக்குழப்பங்களும், மன கிலேசம் உண்டாகும்.செலவுகள் அதிகமாக இருக்கும். இது உங்களுக்கு வீண் செலவாக அமைய வாய்ப்புள்ளது என்பதால் உங்களுக்கு மன குழப்பங்களும், மனவருத்தங்களும் ஏற்படக்கூடும்.
இன்று சிம்ம ராசியினர் பைரவர் ஆலய வழிபாடு செய்வது நல்லது.

கன்னி

கன்னி

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் அலைச்சல் அதிகமாக இருக்கும். இன்று நல்ல செய்திகள் காத்திருக்கிறது.இன்று கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்னைகள் தீரும். மனதிற்கு நிறைவான நாளாக இருந்தாலும் கூட இன்று சகோதர, சகோதரிகளுடன் மன வருத்தம், சொத்து சார்ந்த பிரச்னைகள் வரக்கூடும்.

துலாம்

துலாம்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் கவனமாக செயல்படுவது அவசியம்.கொடுக்கல் வாங்கல் சார்ந்த விஷயங்களில் குழப்பம், பிரச்னைகள் இருக்கும். அலுவலக சிக்கல்கள் தீர்க்க வேண்டியது இருக்கும்.

இன்று காலை வேளையில் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நல்லது.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உற்சாகம் தரும் நாளாக அமையும். புதிய வேலை முயற்சிகள், மாற்றத்திற்கான முயற்சிகள் இன்று சாதக பலன் தரும் நாளாகவும், முடிவுகள் நல்லதாகவும் அமையும்.முயற்சிகள் திருவினை ஆக்கும்.

இன்று விநாயகர் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நல்லது.

தனுசு

தனுசு

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குழப்பம், தடைகள் தீரும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். இன்று திருமண முடிவுகள், குழந்தை பாக்கியத்திற்கான நல்ல முடிவுகள் கிடைக்கும்.
வியாழக்கிழமையான இன்று குரு பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடவும். பின் பைரவர் வழிபாடு செய்வது நல்லது.

மகரம்

மகரம்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று எடுத்த முடிவுகளில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள், வேலை மாற்றங்கள் குறித்த நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் நல்ல செய்திகள் காத்திருக்கிறது. சிலருக்கு குழந்தை பாக்கியமும், திருமண யோகங்கள் கைகூடும். நண்பர்களால் ஆதரவு கிடைக்கும்.
இன்று குலதெய்வ வழிபாடு செய்யவும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று கொடுக்கல், வாங்கலில் இருக்கும் பிரச்னைகள், மனதிற்கு குழப்பத்தை, கஷ்டத்தை தரும். உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குழந்தைகளால் மனக்குழப்பம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும்.
இன்று காலை வேளையில் முருகப் பெருமான் வழிபாடு, பாலபிஷேகம் செய்வது நன்மை தரும்.

மீனம்

மீனம்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் நல்ல திருப்தியான நாளாக அமையும். சந்தோஷமான நாளாக இருக்கும். பல நாட்களுக்கு பின்னர் சந்திக்கக்கூடிய உங்கள் நண்பர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் மூலமாக வேலை விஷயத்தில் சாதகமும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
இன்று அன்னதானம் பைரவர் வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும்.

Leave A Reply

Your email address will not be published.