தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 80

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கும். வியாபாரம் சிறக்கும். வழக்கு விசாரணைகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று குழந்தைகளுக்கு குதுகலமான நாளாக அமையும்.

இன்று புதிய நபர்களின் சந்திப்பு உங்கள் வாழ்க்கைக்கு உதவும். நீண்ட பிரச்சனைகளுக்குப் பிறகு இன்று கொஞ்சம் நிம்மதி அடைவீர்கள். பயணம் செல்ல திட்டமிடலாம். உங்கள் லட்சியங்களை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மன நிறைவு கிடைக்கும். புதிய வேலை, தொழில் தொடங்குவதில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையும்.

குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த சில பொருட்களை வாங்குவீர்கள்,
காகத்திற்கு அன்னம் வைக்கவும். நவகிரகத்திற்குத் தீபம் ஏற்றி வழிபடவும்.​

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று அலைச்சல்கள் அதிகம் இருக்கும். இன்று ஆன்மிக பிரயாணங்கள், ஆன்மிக தலைவர்கள் சந்திக்க வாய்ப்புள்ளது. திருப்தியும், சந்தோஷமும் நிறைந்த நாள். உங்கள் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனம் மகிழ்ச்சி அடையும். உங்களுக்கு நிறைய பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று திருப்தியான நாள். பாக்கியத்தில் சந்திரன் இருப்பதால் வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். பல நாட்களாக இழுபறியில் இருந்த வேலைகள் நிறைவேறும். முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.

உங்கள் சகோதர சகோதரிகளின் உடல்நிலை குறித்து கவலைப்படுவீர்கள். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.
அன்னதானம் செய்ய பித்ருகளின் ஆசி கிடைக்கும்.​

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளது. மகம், பூரம் நட்சத்திரத்தினர் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. இன்று தம்பதியிடையே மனக்கிலேசம் ஏற்படும். குடும்ப வியாபாரத்தில் சில கவலைகளை உருவாக்கலாம். இன்று நீங்கள் சோம்பலை விட்டு கடினமாக உழைக்க வேண்டிய நாள். வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இன்று ஆஞ்சநேயர் வழிபாடு செய்யவும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் போராட்டத்திற்குப் பிறகு பிரச்சினைகளிலிருந்து வெளிவருவதற்கான வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். குழந்தைகளால் நன்மை ஏற்படும்.
வேலை தொடர்பாக அலைச்சல் அதிகமாக இருக்கும். குடும்பத்துடன் இருக்க நேரம் கிடைக்காது, பதவி உயர்வு பெறலாம்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் சில பிரச்சனைகள் தீரும். உங்கள் இயல்பில் மென்மையாக இருக்கவும். இல்லாவிட்டால் பாதிக்கப்படுவீர்கள். இன்று சமூக மற்றும் தொழில் துறைகளில் உங்கள் புகழ் ஓங்கும், அதை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். சில புதிய எதிரிகளும் உருவாகலாம். துணிச்சலும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் இவர்களை வெல்ல முடியும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மனதில் உள்ள எண்ணங்கள் நிறைவேறும். குழந்தைகளால் திருப்தி ஏற்படும். மன பாரங்கள் தீரக்கூடிய நாள். உங்கள் மனதில் அவநம்பிக்கையான எண்ணங்கள் நுழைய அனுமதிக்காதீர்கள். அது உங்கள் வேலையைக் கெடுக்கும். வியாபாரத்தில் ஒரு புதிய ஒப்பந்தத்தைப் பெற வாய்ப்புள்ளது.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று காதலர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வார்த்தைகளில் கவனம் தேவை. சுக்கிரன், சனியின் அமைப்பால் சிறு, சிறு பிரச்னைகள் வந்து செல்லும். வியாபாரம் செய்பவர்கள் இன்று புதிய நபர்களின் தொடர்புகளால் ஆதாயமடைவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணி சிரமப்பட்டு முடிக்கப்படும். அன்றாடப் பணிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று பெற்றோர்களின் உடல் நலம் மேம்படும். இன்று மன பாரம் குறையும். குழந்ந்தைகளின் ஆதரவு, அன்பு கிடைக்கும். சொத்து வாங்குவது அல்லது விற்பது விஷயங்களில் கவனம் தேவை. இல்லையெனில் எதிர்காலத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குழந்தை நல்ல வேலையில் ஈடுபடுவதைக் கண்டு மனம் மகிழ்ச்சியடையும்.​​

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் பெற அலைச்சல் உண்டாகும். குழந்தைகளால் நன்மை சேரும். சிலருக்கு விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்கள் இன்று பணப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும்.

வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபத்தைத் தரும். இன்று சமூகத் துறையிலும் உங்கள் மரியாதை அதிகரிக்கும்.
விநாயகர் வழிபாடு, அபிஷேகம் செய்யவும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் முன்னேற்றமான நாள். குடும்ப பிரச்னைகள் தீரும். ராசியில் சந்திரன் இருப்பது அனுகூல பலனைத் தரும். உங்கள் நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

பெற்றோரின் ஆசீர்வாதத்துடன் செய்யும் வேலைகள் வெற்றியடையும், அபரிமிதமான பலனைத் தரும், இன்று உங்கள் உடல்நலம் குறையக்கூடும் என்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
துளசி, வெற்றிலை மாலை சாற்றி ஆஞ்சநேயர் வழிபாடு செய்யவும்.

Leave A Reply

Your email address will not be published.