தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 76

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சந்திரன் 10ம் இடத்தில் இருப்பதால் அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். அலுவலகம் சார்ந்த வேலைகளில் உங்களுக்கு வெற்றி உண்டாகும். இன்று குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, மேன்மையான நாள்.

உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மற்றும் வெளி உணவை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் எதிரிகள் உங்களை தொந்தரவு செய்ய சதி செய்யலாம்,
இன்று மகாலட்சுமியை வணங்கலாம்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் தன லாபம் கிடைக்கக்கூடிய நாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் சந்திக்கும் நண்பர்கள் மூலம் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. குழந்தைப் பிறப்பு, திருமண யோகங்கள் போன்ற சுப செலவுகள் இருக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். தொழிலதிபர்கள் இன்று லாபம் கிடைப்பதில் சில தடைகளைச் சந்திக்க நேரிடலாம்.
இன்று லட்சுமி நாராயணர் வழிபாடு செய்யவும்.​

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கனவுகள் நிறைவேறும். திருவாதிரை மற்றும் புனர்பூசம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு நீண்ட தூர பயணம் செய்ய வேண்டியது இருக்கும். மனதிற்கு நிம்மதி, ஆறுதல் கிடைக்கும். உங்கள் முக்கியமான வேலைகளில் அலட்சியமாக இருக்க வேண்டாம். நீங்கள் மற்றவர்களுக்கு உதவ தயாராக இருப்பீர்கள்.
சிவ வழிபாடு செய்வது நல்லது

கடகம் ராசி பலன்

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் மனதிற்கு தைரியம் தரக்கூடிய நாள். இன்று கடன் தொல்லை தொடர்பான மன சஞ்சலங்கள் நீங்கும். பல நாட்களுக்கு பிறகு நீங்கள் நினைத்த பொருள் கைவந்து சேரும். மன அறுதல், திருப்தி கிடைக்கும்.

உங்கள் மனைவியுடன் கருத்து வேறுபாடு நீங்கும். எந்த தொழிலையும் செய்தாலும் அதில் அதிர்ஷ்டம் துணை இருக்கும். கடினமாக உழைப்புக்கு முழு லாபம் கிடைக்கும்.
இன்று நரசிம்ம பெருமாளை வணங்கவும்.​

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் கூடுதல் கவனம் செலுத்திச் செயல்பட வேண்டிய நாள். பல நாட்களுக்கு பிறகு குடும்பத்தில் சந்தோஷமும், ஒற்றுமையும் நிலவும்.

இன்று எந்த ஒரு வேலையைச் செய்தாலும் கடின உழைப்புடனும் நேர்மையுடனும் செய்தால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். புதிதாக முதலீடுகளை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்கவும்.
இன்று பசுமாடுகளுக்கு உணவு அளிப்பது நல்லது.​

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் கடன் பிரச்னைகள் தீர்க்க தீர்வு கிடைக்கும். தனலாபங்கள் கிடைக்கும். பல நாட்களாக இழுபறியில் இருந்த பணப்பிரச்னை தீரும். கடன் கொடுப்பது, வாங்குவது தொடர்பான பிரச்னைகள் தீரும்.
இன்று விநாயகர் வழிபாடு விக்கினங்களை விலக்கும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று மனதிற்கு நிறைவு கிடைக்கும். நாள். இன்று கணவன் மனைவி பந்தம் பலப்படும். உங்களைச் சுற்றியுள்ள சூழல் இனிமையாக இருக்கும். உங்கள் வாழ்க்கையின் திசை புதிய திருப்பத்தை எடுக்கும். சொத்து வாங்குதல், ஒப்பந்தம் செய்ய போன்ற விஷயங்களில் கவனம் தேவை. அலைச்சல் இருக்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மனதில் அமைதி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். பல ஆண்டுகளாக குடும்பத்திலிருந்த சண்டைகள் தீரும். சொத்து விவகாரங்களில் நல்ல தீர்வு கிடைக்கும். நண்பரின் உதவியால் தடைப்பட்ட வேலைகள் முடிவடையும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
ஒரு புதிய திட்டத்திற்கான வேலைகளும் தொடங்குவதால் மகிழ்ச்சியாகவும், மிகவும் மும்மரமாகவும் இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை கோபப்படக்கூடும்.
சிவாலயத்தில் தீபம் ஏற்றி வழிபட பிரச்னைகள் தீரும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று மனதிற்கு இனிமையான நாள். சொந்த பாந்தங்கள், நண்பர்கள் மூலம் உங்களுக்கு செலவுகள் காத்திருக்கிறது. பங்கு சந்தை முதலீடு லாபத்தை தரும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற உறவுகள், நண்பர்கள் மீண்டும் இணைய வாய்ப்புள்ளது.
உங்கள் மனைவியின் முழு ஆதரவையும் தோழமையையும் பெறுவதைக் காணலாம். அனுபவம் வாய்ந்த ஒருவரால் நன்மை அடைவீர்கள்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று எடுத்த காரியத்தில் வெற்றி உண்டு. உயர் அதிகாரிகளால் லாபமும், வெற்றியும் கிடைக்கும். குடும்ப பகை, சண்டைகள் தீர்ந்து ஒற்றுமை தரும் நாள். உடல்நிலை பாதிப்பால் அலைச்சலும், செலவுகளும் உண்டாகும். அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கொஞ்சம் பணம் செலவழிப்பீர்கள்.​

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று வேலைவாய்ப்பை நோக்கிச் செயல்படுபவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள், மாணவர்கள் படிப்பில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். கல்வியில் வெற்றி பெறுவதில் தடைகள் ஏற்படலாம். சொத்து சார்ந்த விஷயங்களில் நன்மை பெறலாம்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தொழிலில் முதலீடு செய்வதால் வெற்றி கிடைக்கும். உங்கள் முதலீடு இரட்டிப்பாகும். வேலையில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உங்களின் வேலையை மற்றவர்கள் மீது திணிக்க வேண்டாம். நீங்கள் மற்றவர்கள் என்ன வேலை செய்ய வேண்டும் என வற்புறுத்த வேண்டாம். உடல்நலம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.