தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 162

மேஷம்

மேஷம்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று லாபம் தரக்கூடிய நாளாக இருக்கும். மனதிற்கு நிறைவான நாளான இருப்பதோடு, பக்கிய ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் எதிலும் லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்னைகள், சொத்து சார்ந்த சிக்கல்கள் தீரும். வியாபாரம் சம்பந்தமாக பயணம் மேற்கொண்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
சனிக்கிழமை, கரிநாளான இன்று ஆலயங்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்ய சனி தோஷம் நீங்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நல்ல ஒரு உயர்வை தரக்கூடிய நாளாக இருக்கும். இன்று ரோகிணி நட்சத்திரகாரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் எந்த ஒரு வேலை செய்தாலும் அதில் முழு கவனம் செலுத்தவும். எச்சரிக்கையுடம் முடிவுகளை எடுக்கவும். வேலையில் பணிச்சுமை இருக்கும். பேச்சு, செயலில் கவனம் தேவை.
ஆலய வழிபாடு, நல்லெண்ணெய் தானம் செய்வது நன்மை தரும்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று முழுவதும் சிறப்பான நாளாக இருக்கும். சிலர் நீண்ட பயணம் செய்ய வேண்டியது இருக்கும். இன்று தன லாபம் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக செய்ய நினைத்த சில வேலைகளை செய்து முடிக்க முடியும். கூட்டுத் தொழிலில் புதிய வருமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். லாபகரமான ஒப்பந்தங்களைப் பெறலாம்.

கடகம்

கடகம்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் வணிகச் சிக்கல்களில் கழியும். குடும்ப உறுப்பினர்களுக்காக நேரத்தை செலவிட முடியும். இன்று குழந்தையின் ஆரோக்கியத்தில் குறைவு ஏற்படலாம். நீங்களுக்கு எதிர்பார்த்ததை விட சில செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெளி உணவு மற்றும் பானங்களைத் தவிர்க்கவும். இன்று குடும்பத்தில், உடன்பிறந்தவர்களின் உதவியைப் பெறலாம். தடைபட்ட சில வேலைகள் முடிவடையும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வியாபாரத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் எதிரிகள் உங்களுக்கு தீங்கு செய்ய முயற்சிப்பார்கள். அதனால் உங்கள் செயல்பாடுகளில் கவனம் தேவை. நீங்கள் யாருடைய விஷயத்திலும், பேச்சிலும் தலையிட வேண்டாம். இன்று பயணம் செல்வதற்கான திட்டமிடலாம். கடன் கொடுத்த பணத்தை திரும்பப் பெறலாம், இது உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும்.

கன்னி

கன்னி

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சமூகப் பணிகளில் சுறுசுறுப்பாக பங்கேற்பீர்கள். மக்களின் ஆதரவு அதிகரிக்கும். சமய நிகழ்வுகளுக்கும் கொஞ்சம் பணம் செலவழிப்பீர்கள். இன்று வியாபாரத்தில் புதிதாக ஏதாவது செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் சாதக பலன்கள் கிடைக்கும். இன்று கடன் வாங்குவது, கொடுப்பது தவிர்ப்பது அவசியம்.

துலாம்

துலாம்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் இனிமை இருக்கும். வேலைகளையும் நினைத்த இலக்கை அடையவும் கடினமாக இருக்கும். இன்றும் தொழிலில் எந்த முடிவும் எடுப்பதை தவிர்க்கவும்.
இன்று இரட்டை மனநிலையில் இருப்பீர்கள். சிந்திக்காமல் செயல்படுவதால் நிதி விஷயங்களில் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். உங்கள் குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள். உத்தியோகத்தில் சில நல்லவர்களைச் சந்திப்பீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வேலை செய்பவர்கள் புதிய வேலை, பொறுப்புகள் கிடைக்கும். பண விஷயத்தில் கவனமாக செயல்படவும். இன்று, குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதல் எல்லா விஷயத்திலும் பெறுவீர்கள். திருமண முயற்சிகள் சாதக செய்தி கிடைக்கும். அன்புக்குரியவருடன் நெரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். இது உங்கள் மனதை மகிழ்ச்சியடையச் செய்யும்.

தனுசு

தனுசு

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையை மற்றவர்கள் மூலம் செய்து முடிப்பீர்கள். இன்று இனிப்பும், கசப்பும் கலந்த நாளாக இருக்கும். உங்கள் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட நேரிடும். குழந்தை திருமணத்தில் இருந்த தடைகளை நீக்க இன்று குடும்ப உறுப்பினர்களின் உதவி கிடைக்கும். உங்கள் வேலையை செய்து முடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். இன்று நீங்கள் வருமானம் மற்றும் செலவு விஷயத்தில் சமநிலையை கடைப்பிடிக்கவும்..

மகரம்

மகரம்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பழைய தடைபட்ட வேலைகள் இன்று முடிக்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் அனைத்து வேலைகளும் இன்று வெற்றி பெறும். உங்கள் குலதெய்வங்களை வழிபடுவது நல்லது. இன்று உங்கள் குடும்பத்தில் உள்ள மூத்த நபரின் அறிவுரை பிரச்சனைகளை தீர்க்க உதவும். குடும்பத்தில் பதற்றம் நிலை முடிவுக்கு வரும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வுக்கான நல்ல செய்தி கிடைக்கும். மகிழ்ச்சியாக உணர்வீர்கள். இன்று, ஏதேனும் பழைய உடல்நல பிரச்சனை தொந்தரவு செய்யக்கூடும். பழைய பிரச்னைகளை தீர்க்க முடியும். உடல்நிலையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் கவனம் தேவை. யாருடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பேச்சில் இனிமை தெவை.

மீனம்

மீனம்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவீர்கள். உங்களுக்காக கொஞ்சம் பணம் செலவழிப்பீர்கள். இன்று ஆடம்பரத்தைத் தவிர்ப்பது நல்லது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இன்று நீங்கள் உங்கள் குடும்பம், குழந்தைகளுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

Leave A Reply

Your email address will not be published.