தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய ராசி பலன்

0 98

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி பலன்

மேஷ ராசி நேயர்களுக்கு இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். நண்பர்களுக்கு செலவு செய்யக்கூடிய சூழ்நிலைகள் உருவாகலாம். இருந்த போதிலும் இன்று மனதிற்கு மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கும்.

சமூகப் பணிகளிலும் தீவிரமாகப் பங்கேற்பீர்கள். சொத்து வாங்கும், விற்கும் முயற்சியில் ஆவணங்களைச் சரிபார்க்கவும்.
சதுர்த்தி திதியான இன்று விநாயகர் வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி பலன்

ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு மனதிற்கு சந்தோஷத்தை தரும். பங்குசந்தை முதலீடுகள் இன்று நல்ல லாபத்தை தரும். 6ம் இடத்தில் இருக்கக்கூடிய கேது பகவான் உங்களுக்கு தன் லாபத்தை தருவார். இன்று எந்த முடிவையும் மிகவும் கவனமாக எடுக்க வேண்டும்.

குழந்தைக்காக செய்யும் எந்த வேலையையும் சுயமரியாதையை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் தோழமையையும் பெறுவீர்கள்.
கணபதி வழிபாடு செய்ய உங்களின் துன்பங்கள் தீரும்.

மிதுன ராசி பலன்

மிதுன ராசி பலன்

மிதுன ராசி நேயர்களுக்கு இன்று புதிய வியாபார முயற்சிகள் வெற்றி தரும். இன்று பல நாட்களாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த சில நல்ல விஷயங்கள் உங்கள் கைக்கு வந்து சேரும். உங்கள் முயற்சிகளுக்கு விநாயகரின் துணை உண்டு.

இன்று அன்னதானம் மேற்கொள்ள நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை முழுவதுமாக செய்து முடிப்பீர்கள். சோம்பலை விரட்டி முன்னேற வேண்டும். மாணவர்களின் உயர்கல்வியில் இருந்த தடை நீங்கும்.

கடக ராசி பலன்

கடக ராசி பலன்

கடக ராசி நேயர்களுக்கு இன்று ஆயில்யம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டம தினமாக அமைகிறது. இன்று விநாயகருக்கு செய்யக்கூடிய பாலபிஷேகம், சந்திரனுக்குண்டான தோஷத்தை நிவர்த்தி செய்யக்கூடியதாக அமையும். கடக ராசி அன்பர்கள் இன்று சிந்தித்துச் செயல்படவும்.
இன்று உடல் நலம் குறைய வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பேச்சில் இனிமையைக் கடைப்பிடிக்க வேண்டும், உங்கள் வாழ்க்கைத் துணையின் மீதான நம்பிக்கையை ஆழப்படுத்தும்.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று மகம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் அமைகின்றது. இன்று விநாயகருக்கு அபிஷேகம் செய்து, கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்யலாம். உங்களுக்கு இன்று வரவை விட செலவு அதிகமாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு ம்னதிற்கு திருப்தியை தரும். பிஸியான நாளாக இன்று இருக்கும். எந்த ஒரு முடிவையும் கூடுதல் கவனத்துடன் செய்யவும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி பலன்

கன்னி ராசி நேயர்களுக்கு இன்று வழக்குகள், விசாரணைகளில் வெற்றி அடையலாம். பல நாட்களாக இருந்துவந்த சண்டை சச்சரவுகள் தீரும். குடும்ப சொத்து சார்ந்த பிரச்னைகள் இருப்பின் இன்று நல்ல முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் கடின முயற்சி தேவைப்படும். புதிய வருமானம் கிடைக்கும். உங்கள் செல்வத்தை அதிகரிக்கும் மற்றும் உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும் நாள்.
இன்று பைரவர் வழிபாடு செய்வது நல்லது.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி பலன்

துலாம் ராசி நேயர்களுக்கு இன்று ஆடி வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு செய்வது சிறப்பு. வெள்ளிக்கிழமை வழிபாட்டில் ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது கூடுதல் பலன் தரும். இன்று மனதில் இருக்கும் கவலைகள் தீரும்.

இன்று எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதை கடின உழைப்புடனும், அர்ப்பணிப்புடனும் செய்து முடிப்பதால் நிச்சயம் பலன் கிடைக்கும். பிள்ளைகளின் பொறுப்பு நிறைவேறும். சமூகப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள்.

விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று நாள் முழுவதும் சற்று அலைச்சலான நாளாக இருக்கும். ஆடி வெள்ளிக்கிழமையான இன்று சங்கடஹர சதுர்த்தியும் இருப்பதால், இன்று விநாயகருக்கு அபிஷேகம் செய்வதும், அம்மன் ஆலயத்தில் வஸ்திர தானம் செய்வதால் உங்களுக்கு ராகுவால் ஏற்படும் பிரச்னைகள் தீரும்.

உங்கள் உயர் அதிகாரி அல்லது தந்தையுடன் மனக்கசப்பு ஏற்படலாம். நீங்கள் பொருளாதார திட்டங்களில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு இன்று நல்ல சலுகைகள் கிடைக்கும். உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி பலன்

தனுசு ராசி நேயர்களுக்கு இன்று விட்டுப் பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புகள் உண்டு. பலகாலமாக சொந்த பந்தங்களுக்கிடையே இருந்து வந்த மனகசப்புகள் மாறி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

உங்கள் மரியாதையை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி குறித்து விவாதிப்பீர்கள். உங்கள் விருப்பத்திற்காக கொஞ்சம் பணம் செலவழிப்பீர்கள்.
தனுசு ராசியினர் இன்று ஆடி வெள்ளிக்கிழமையில் சுமங்கலிகளுக்கு மஞ்சள் கொடுப்பது நல்லது.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி பலன்

மகர ராசி நேயர்களுக்கு இன்று சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு பாலபிஷேகம் செய்யலாம். நீங்கள் சதுர்த்தி விரதம் மேற்கொள்வதால் உங்களுக்கு புத்திர பாக்கியம் உருவாகும். இன்று மனதிற்கு நிரைவான நாளாக அமையும்.
வேலையில் அதிக வெற்றியைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பண நெருக்கடியை சந்திக்க நேரிடும். திருமணத்தில் இருந்து வந்த தடை நீங்கும்.

கும்ப ராசி பலன்

கும்ப ராசி பலன்

கும்ப ராசி நேயர்களுக்கு இன்று அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். இருசக்கர வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. இன்று நீங்கள் கடன் கொடுப்பது, வாங்குவது கண்டிப்பாக தவிர்க்கவும்.
பணிபுரிபவர்களுக்கு அதிகபட்ச வாய்ப்புகள் கிடைக்கும்.

திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வேலை வாய்ப்பில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். நோய்கள் வாழ்க்கைத் துணையை தொந்தரவு செய்யலாம்.
சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யவும்.

மீன ராசி பலன்

மீன ராசி பலன்

மீன ராசி நேயர்களுக்கு இன்று குடும்பத்தில் சௌக்கியங்கள் அதிகரிக்கும். இன்று நீங்கள் ராகு காலத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு செய்ய 2ம் இடத்தில் இருக்கும் ராகுவுக்கான தோஷம் நிவர்த்தி ஆகும்.
வியாபாரம் உங்கள் முதலீடு சிறப்பான பலனைத் தரும். சில உடல் நல பிரச்னைகள் தொந்தரவு செய்யலாம். மருத்துவ செலவுக்காக சில பணமும் செலவிடப்படும்.

Leave A Reply

Your email address will not be published.