தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய சிந்தனை துளிகள்

0 77

எண்ணங்கள் என்னும்
மந்திர சாவியை சரியாக
பயன்படுத்தினால்.. திறக்காத
கதவுகளையும் திறக்க முடியும்.!

அடுத்தவரை குறை சொல்வதை
நிறுத்தும் போது தான்
உண்மையான மகிழ்ச்சியை
உணர தொடங்குவீர்கள்.

பகை எண்ணங்களுக்கு சக்தி
கொடுப்பது வீட்டிற்குள்
விஷ செடிகளை
வளர்ப்பதற்கு சமம்.!

பகையை வளர்த்து சக்தி
பெறாமல்.. அன்பை வளர்த்து
சக்தியை பெறுங்கள்.

உங்களை தாழ்த்திக்கொண்டு
இன்னொருவரை உயர்வாக
பேச வேண்டும் என்று
அவசியம் இல்லை.!

மிக பெரிய தோல்வியில் தான்..
மிக பெரிய வாய்ப்புக்கள்
ஒளிந்திருக்கிறது.

சந்தேகம் தரும் எண்ணங்களை
நீக்கி.. நம்பிக்கை தரும்
எண்ணங்களை சேர்த்தால்..
வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.!

உங்கள் மனதின் சாவியை
நீங்கள் வைத்துக் கொண்டால்..
வாழ்நாள் சுதந்திரத்தை
உணர முடியும்.!

பிறர் கடுமையாக விமர்சிக்கும்
போது பொறுமையாக
இருப்பவர்கள் கோழைகள் இல்லை
ஒற்றுமையை விரும்புபவர்கள்.

நேரத்தை வீணடிப்பது பணத்தை
வீணடிப்பதற்கு சமம்.!

பணமும் வேண்டும்..
நல்ல குணமும் வேண்டும் என்ற
நோக்கத்துடன் செயல்படுங்கள்.

தோல்வி அடைந்தால்
விமர்ச்சிப்பார்கள் என்று பயந்து..
முயற்சி கூட செய்யாமல் இருப்பது
மாபெரும் தோல்வி.!

Leave A Reply

Your email address will not be published.