தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆலயங்களுக்கு விடுக்கப்பட்ட புதிய விதி முறை

0 101

கதிர்காமம் ஆலயம் உட்பட நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் இருந்து பெறப்படும் தங்கம், பணம் உள்ளிட்ட அனைத்தையும் பூசகர்களால் எடுத்து செல்ல முடியாது எனவும் ஆலயங்களின் சகல பொறுப்பும் பஸ்நாயக்க நிலமேக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் கீர்த்தி சிறிபத்தன தெரிவித்துள்ளார். 

சட்டத்தின் மூலம் பெறப்பட்ட அதிகாரங்களின்படி ஆலயங்களின் அனைத்து பொறுப்பும் பஸ்நாயக்க நிலமேகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக
அவர் குறிப்பிட்டுள்ளார்.

கதிர்காமம் ஆலயத்தில் பணம் மற்றும் தங்கப் பொருட்களுடன் பூசகர்களை சேவையில் இணைக்கும் அதிகாரமும் பஸ்நாயக்க நிலமேக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் பௌத்த விவகார ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.