தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆசியக் கிண்ண தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய பாபர் அசாம்

0 82

2023 ஆசியக் கிண்ண தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும், நேபாளம் அணியும் மோதிய நிலையில் பாகிஸ்தான் அணி 238 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது பாகிஸ்தான் அணி தலைவர் பாபர் அசாமின் அதிரடி ஆட்டம் தான்.

அவர் 14 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 151 ஓட்டங்கள் குவித்தார்.இதன்மூலம் ஆசிய கோப்பை வரலாற்றில் 150 ஓட்டங்கள் எடுத்த முதல் தலைவர் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றுள்ளார்.

நேற்றைய போட்டியில் அவரின் ஒவ்வொரு ஷாட்களும் மிக நேர்த்தியாகவும், மிரட்டலாகவும் இருந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.