தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அச்சு அசல் நடிகர் யோகி பாபு மாதிரி இருக்கும் நபர்

0 66

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராகவும், மிகவும் பிஸியான நடிகராகவும் மாறியிருப்பவர் யோகிபாபு. ஒரு படத்தின் ஹீரோவுடைய கால்ஷீட்டை எளிதாக பெற்று விடலாம். ஆனால் யோகிபாபுவின் கால்ஷீட் கிடைப்பது ரொம்ப கஷ்டம் என்று திரைத்துறையினர் கூறும் அளவுக்கு படு பிஸியாக இவர் இருக்கிறார்.

ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் நடிக்கும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இடம்பெறுகிறார். வடிவேலுவுக்கு அடுத்தபடியாக, வசனங்கள் பேசும் முன்பாகவே பாடி லேங்குவேஜால் ரசிகர்களை சிரிக்க வைக்கும் திறமை யோகிபாபுவுக்கு உள்ளது.

கதையின் நாயகனாக யோகி பாபு நடித்த தர்மபிரபு, மண்டேலா, பொம்மை நாயகி, லக்கி மேன் உள்ளிட்ட படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த வாரம் யோகிபாபு நடிப்பில் குய்கோ எனும் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து அயலான், அரண்மனை 4, தளபதி 68, கங்குவா என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அச்சு அசல் அப்படியே நடிகர் யோகி பாபு போலவே இருக்கும் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகிறது. இவர் பெயர் மணிபாலன் என்றும் வெளி ஊர்களுக்கு செல்லும் போது பலரும் இவரை யோகிபாபு என நினைத்து தன்னுடன் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள் என்றும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.