2023 உலகக்கோப்பை கிரிக்கெட் : இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது இந்திய அணி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. நேற்று நடைபெற்ற 2 ஆவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து அகமதாபாத்தில் வரும் ஞாயிறு அன்று நடைபெறவுள்ள ஃபைனல் மேட்ச்சில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

லீக் ஆட்டத்தில் 9 மேட்ச்சுகளிலும் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி நேற்று முன் தினம் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் லீக் ஆட்டத்தில் 4 ஆம் இடத்தை பிடித்த நியூசிலாந்துடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 397 ரன்கள் குவிக்க, 398 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய நியூசிலாந்து அணி 327 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.

2 ஆவது அரையிறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. லீக் சுற்றில் இரு அணிகளும் தலா 7 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தன. பாயின்ட்ஸ் டேபிளில் தென்னாப்பிரிக்கா 2 ஆவது இடத்தையும் ஆஸ்திரேலியா 3 ஆவது இடத்தையும் பிடித்திருந்தது.

இந்நிலையில், இன்று நடந்த 2 ஆவது அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்காவால் 212 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் மார்க்ரம் மட்டும் 101 ரன்கள் குவித்து ஸ்கோர் உயர உதவினார்.  அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும் இடைப்பட்ட ஓவர்களில் முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் தடுமாறத் தொடங்கியது.

2023 உலகக்கோப்பை கிரிக்கெட்
Comments (0)
Add Comment