உலகக் கிண்ணம் மீது அவுஸ்திரேலிய வீரர் தனது கால்களை வைத்திருந்தது என் மனதை காயப்படுத்தியது – முகமது ஷமி

உலகக் கிண்ணம் மீது அவுஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கால் வைத்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானதற்கு பலர் கண்டனம், அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இது குறித்து கருத்து தெரிவித்துள்ளர்.

அவர் கூறியதாவது:- உலகக் கிண்ணம் மீது அவுஸ்திரேலிய வீரர் தனது கால்களை வைத்திருந்தது என் மனதை காயப்படுத்தியது.

உலகில் உள்ள அனைத்து அணிகளும் வெல்லப் போராடும் கிண்ணம், உங்கள் தலைக்கு மேல் நீங்கள் தூக்க விரும்பும் கிண்ணம் மீது கால் வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை.

ஆடுகளங்களின் தன்மையை முன்கூட்டியே சரி பார்ப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பொதுவாக பந்து வீச்சாளர்கள் மைதானத்திற்கு வந்த பிறகு ஆடுகளத்தை சரி பார்க்கிறார்கள்.

நான் ஆடுகளம் அருகில் செல்வதில்லை. ஏனென்றால் நீங்கள் பந்து வீசும் போதுதான் அது எப்படி உள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். பிறகு ஏன் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை எளிமையாக வைத்திருப்பது நல்லது. உங்களை நிதானமாக வைத்திருங்கள். அப்போது தான் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். என கூறியுள்ளார்.

உலகக் கிண்ணம்முகமது ஷமி
Comments (0)
Add Comment