இறுகப்பற்று திரைப்பட அப்டேட்

‘இறுகப்பற்று’ நவம்பர் 6ம் திகதி ஓடிடியில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடித்துள்ள ‘இறுகப்பற்று’ ஒக்டோபர் 6ம் திகதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நவம்பர் 6ம் திகதி ஓடிடியில் ‘இறுகப்பற்று’ வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிந்து அறிவித்துள்ளது.

இறுகப்பற்று திரைப்பட அப்டேட்
Comments (0)
Add Comment