தமிழ் ஓசை
தமிழ் ஓசை

8 இலட்சம் வரையிலானவர்களின் மின் விநியோகம் துண்டிப்பு

0 28

உரிய காலத்தில் மின் கட்டணத்தை செலுத்தாமையின் காரணமாக இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில்,நாடு முழுவதுமுள்ள 8 இலட்சம் வரையிலானவர்களின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கு மேலதிகமாக, உரிய காலத்தில் மின் கட்டணத்தை செலுத்தாமைின் காரணமாக நாடு முழுவதும் மேலும் 12 இலட்சம் வரையிலான குடும்பங்களுக்கு (வீடுகள்) சிவப்பு எச்சரிக்கை பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலும் அறிய முடிகிறது. 

மின் கட்டணம் இந்த வருடத்தில் இரு முறைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்பில் அநேகமானவர்களின் மின் கட்டணம் பலமடங்கு அதிகரித்தது. அநேகமானவர்கள் அவர்களின் பொருளாதார நிலைமைக்கமையவே மின் கட்டணத்தை செலுத்த முடிாமல் போயுள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.