தமிழ் ஓசை
தமிழ் ஓசை

74.4 வீதமாக அதிகரித்துள்ள அந்நியச் செலாவணி

0 77

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் சட்ட ரீதியாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் 3,863 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை அவர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ளனர் என  பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 2,215 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் இந்த தொகை 74.4 வீதமாக அதிகரித்துள்ளது என  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.