தமிழ் ஓசை
தமிழ் ஓசை

56 மத குருமார்கள் சிறையில் – இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி அனுராத ஜயரத்ன

0 64

கொலை, பலாத்காரம், பாரிய பாலியல் துஷ்பிரயோகம், பண மோசடி மற்றும் புதையல் தோண்டல் ஆகிய குற்றச்சாட்டுக்களில் 56 மத குருமார்கள் சிறையில் உள்ளதாக நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி அனுராத ஜயரத்ன நேற்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவர்களில் 29 பௌத்த தேரர்கள், 03 இந்து குருமார்கள், 02 மௌலவிகள் கைதிகள் என்ற அடிப்படையிலும், 19 பௌத்த தேரர்களும், 01 கத்தோலிக்க மதகுருக்கள் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை மாவட்ட சபை உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜயரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன், மனித படுகொலை குற்றச்சாட்டில் 2 பௌத்த தேரர்களும் 01 இந்து குருக்களும் உள்ளனர். 01 கத்தோலிக்க மத குரு சந்தேகத்தின் அடிப்படையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நிதி மோசடி குற்றச்சாட்டில் 2 தேரர்களும், 1 இந்து மதகுருக்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 03 பௌத்த தேரர்கள் சிறையில் உள்ளனர். கொடூர பாலியல் குற்றச்சாட்டுடன் 02 பௌத்த தேரர்கள் சிறையில் உள்ளார்கள்.

இந்து, முஸ்லிம், கத்தோலிக்க மதகுருமார்கள் இந்த குற்றச்சாட்டுக்குள் உள்ளடங்கப்படவில்லை. சிறு வயது பிள்ளைகள், ஆண் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் 20 பௌத்த தேரர்களும், 01 இந்து மதகுருக்களும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய சிறைச்சாலைகளில் 48 பௌத்த தேரர்களும் , 03 இந்து குருக்களும், 01 மௌலவிகளும், 04 கத்தோலிக்க மதகுருமார்களும் சிறைக்கைதிகளாக உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.