தமிழ் ஓசை
தமிழ் ஓசை

4 மாத குழந்தை உயிரிழப்பு

0 109

வெலிகம – நலவன பகுதியில் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், 4 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி விஷமானமையே இறப்புக்கான காரணம் என குழந்தையின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த 2 ஆம் திகதி நான்கு மாதத்திற்கான தடுப்பூசி, வெலிபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் குறித்த குழந்தைக்கு செலுத்தப்பட்டது.

இதனையடுத்து, குறித்த குழந்தைக்கு ஏற்பட்ட கடும் குளிர் காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே இறந்திருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.