தமிழ் ஓசை
தமிழ் ஓசை

 2100 கடல் சங்குகள் மீட்பு 

0 89

கற்பிட்டியில் இருந்து சட்ட விரோதமாக  மன்னாருக்கு அனுப்புவதற்கு தயாராக வைத்திருந்த கடல் சங்குகள் பொலிஸாரினால் திங்கட்கிழமை (04) கைப்பற்றப்பட்டுள்ளன.

கற்பிட்டியில் இருந்து பயணிக்கும் இ.போ.ச பயணிகள் பஸ்ஸின் ஊடாக மன்னாருக்கு கொண்டு செல்வதற்கு தயார்படுத்தப்பட்டிருந்த 2100 கடல் சங்குகள் கைப்பற்றியுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் பயணத்தை தொடங்கும் முன் கற்பிட்டி நகரில் பஸ்ஸை சோதனையிட்ட பொலிஸார் பஸ்ஸின் பின்புற டிக்கியில் இருந்து 07 உரைப் பைகளில் இருந்து 2100 கடல் சங்ககள் மீட்கப்பட்டுள்ளன.

எனினும் குறித்த கடல் சங்குகளை பஸ்ஸில் ஏற்றிச் சென்றது யார் என இதுவரை தெரியவில்லை எனவும் இது தொடர்பான மேலதிக விசாரனைகள மேற்கொண்டு வருவதாகவும் கற்பிட்டி  பொலிஸார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.