தமிழ் ஓசை
தமிழ் ஓசை

2024 பாதீட்டில் வங்கி கடன் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

0 55

2024ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சியாளர்களுக்கு வங்கி கடன் வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

 கொழும்பு – தாமரை தடாக அரங்கில் புதன்கிழமை (01) நடைபெற்ற 2023ம் ஆண்டுக்கான தேசிய கைத்தொழில் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறினார்.

இலங்கையின் ஏற்றுமதியை இலக்காக கொண்டு, உற்பத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்குடன் இந்த கடன் திட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாடு கடந்த காலங்களில் எதிர்நோக்கிய நெருக்கடிகள் மீண்டும் ஏற்படாத வகையில் தவிர்த்து கொள்வதே தனது நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதற்காக காலத்திற்கு ஏற்ற சரியான தீர்மானங்களை தான் எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.