தமிழ் ஓசை
தமிழ் ஓசை

14 நாட்களுக்கு முடக்கப்பட்ட வவுனியா சிறைச்சாலை

0 78

வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டுள்ளமையால் சிறைச்சாலை 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன், கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்தவாரம் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலருக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து சிறைச்சாலை வளாகம் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன், கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதற்கான செயற்பாடும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நோய்பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பனிமனையினால் அனைத்து கைதிகளுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் விளக்கமறியலில் உள்ள கைதிகளின் நீதிமன்ற தவணைகளுக்கு புதிய திகதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், சில வழக்குகள் நிகழ்நிலை தொழில்நுட்ப உதவியுடன் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை வவுனியா சிறைச்சாலையில் இடவசதி பற்றாக்குறை நீண்டகாலமாக உள்ளதுடன் அளவுக்கதிகமான கைதிகள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.