தமிழ் ஓசை
தமிழ் ஓசை

12 ஆண்டுகளாக மனைவியை சிறைப்பிடித்த கணவர் கைது

0 90

12 ஆண்டுகளாகச் சொந்த வீட்டில் தமது மனைவியைச் சிறைப்பிடித்து வைத்திருந்ததாக நம்பப்படும் 55 வயது ஜெர்மனிய ஆடவரை பிரான்ஸ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அந்தப் பெண் நிர்வாணமாக, மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்டார்.

வீட்டின் படுக்கையறையிலிருந்து அவர் மீட்கப்பட்டுள்ளார். தலை மொட்டையடிக்கப்பட்டு உடலில் பல்வேறு காயங்களுடன் இருந்த அவர் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அவர் உடல்நலம் குன்றியிருப்பது மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஊடகங்கள் கூறியிருந்ததுபோன்று அந்தப் பெண்ணின் உடலில் எலும்பு முறிவுகளோ காயங்களோ இல்லை. அவருக்கு நீர்ச்சத்துக் குறையவில்லை என்று ரத்தப் பரிசோதனையில் தெரியவந்தது.

53 வயதாகும் அந்தப் பெண் உதவி கேட்டுத் தொலைபேசி வழி பொலிஸாரை அழைத்ததை அடுத்து இச்சம்பவம் அம்பலமானது. அந்தப் பெண்ணைப் பார்த்தே 10 ஆண்டுகள் ஆவதாக அக்கம்பக்கத்தார் கூறியுள்ளனர். தமது மனைவிக்குப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகக் கணவர் மற்றவர்களிடம் கூறி வந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.