Developed by - Tamilosai
119 தொலைபேசி இலக்கத்தை தவறான முறையில்
பயன்படுத்தி உண்மைக்குப்புறம்பான முறைப்பாடுகளை வழங்குவதை அவதானிக்க முடிவதாகவும் அவ்வாறோனோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலிலையே இதனைத் தெரிவித்துள்ளது.
இவ்வாறான போலியான முறைப்பாடுகளால் 119 தொலைபேசி ஊடாக பெறப்படும் முக்கியமான முறைப்பாடுகளை மிக விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு, இடையூறுகளும் தாமதங்களும் ஏற்படலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக் காட்டியுள்ளது.
ஆகவே, பொதுமக்களால் 119 தொலைபேசி இலக்கத்தை உபயோகிக்கும் போது முறைகேடான வழியிலன்றி, முன்னுரிமை மற்றும் நம்பகத்தன்மையான
தகவல்களை வழங்கி துரித கதியில் நடைமுறைப்படுத்த வேண்டிய சம்பவங்கள் தொடர்பில் மாத்திரம் இந்த இலக்கத்தை உபயோகிக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றது.
உண்மைக்குப் புறம்பானதும் நம்பகத்தன்மையற்றதுமான தகவல்களை பொலிசாருக்கு வழங்கும் போது இலங்கை தண்டனைச் சட்டக் கோவை 180ஆவது பிரிவிற்கமைய
குற்றவாளியாவதுடன், 6 மாதக் காலத்திற்கு குறையாத சிறைத் தண்டனைக்கோ அல்லது தண்டப்பணம் செலுத்துவதற்கோ அல்லது இரு வகையில் ஒன்றின் கீழ் குற்றவாளியாக்கப்படுவார்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
