தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வடக்கில் ஆர்வம் காட்டும் சீனா

0 65

நேற்று திங்கட்கிழமை (06) சீன தூதுவர் தலைமையிலான குழுவினர் திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து நெடுந்தீவு பிரதேச மக்களுக்காக 500 உலருணவுப் பொதிகளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கையளித்தனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங்,

சீன தொழிற்துறை முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர் என தெரிவித்த இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங், வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நான் வடக்கு மாகாணத்திற்கு வந்துள்ளேன்.சீன பௌத்த மக்களால் 5000 உணவு பொதிகளை வடக்கு மாகாண மக்களுக்கு வழங்க வந்துள்ளேன்.

கடந்த முறை வடக்கில் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கினோம். உணவுப் பொதி நெருக்கடி நிலையில் உதவியாக இருக்கும். உணவு பொதி 7000 ரூபாய் பெறுமதியானது. 

உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள உறவின் அடிப்படையில் உதவிகளை வழங்குவோம். கொரோனா நேரத்தில் நீங்களும் சினோபாம் தடுப்பூசியை பெற்றிருப்பீர்கள். பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையுடன் பொருளாதாரதாதை உயர்த்த முதலாவதாக சீனாவே கை கொடுத்தது. சீன எதிர்காலத்திலும் கை கைகொடுக்கும் என்றார். 
 
சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடு. மிகப்பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. உங்களை அதற்கு  வரவேற்கிறோம் என்றார்.  

Leave A Reply

Your email address will not be published.