தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மியன்மாரின் முன்னாள் அரசுத் தலைவர் ஆங் சான் சூகிக்கு 5  வழக்குகளில் இராணுவ ஆட்சியாளர்களால் மன்னிப்பு 

0 98

மியன்மாரின் முன்னாள் அரசுத் தலைவர் ஆங் சான் சூகிக்கு 5  வழக்குகளில் இராணுவ ஆட்சியாளர்களால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் இன்று தெரிவித்துள்ளன.

மியன்மார் அரச நிர்வாகத் தலைவரினால் 5 வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், அவர் முற்றிலுமாக விடுவிக்கப்படவில்லை எனவும், அவர் மேலும் 14 வழக்குகளை எதிர்கொண்டுள்ளார் எனவும் மியன்மார் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

78 வதான ஆங் சான் சூகி,1991  ஆம் ஆண்டில் சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்றவர்.

2021  ஆம் ஆண்டு இராணுவப் புரட்சியையடுத்து, ஆங் சான் சூகி உட்பட ஜனநாயக அரசியல் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர்.

பல்வேறு வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு மொத்தமாக 33 வருட சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊழல், சட்டவிரோதமாக வோக்கி டோக்கிகளை வைத்திருந்தமை, கொரோனா கட்டுப்பாடுகளைப் புறக்கணித்தமை முதலானவை தொடரபான குற்றச்சாட்டுகளும் இவற்றில் அடங்கும். 

சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், கடந்த வியாழக்கிழமை வீட்டுக் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், 5 வழக்குகளிலிருந்து அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள பௌத்த மதக் கொண்டாட்டமொன்றை முன்னிட்டு சுமார் 7000 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆங் சான் சூகிக்கும் 5 வழக்குகளில் மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.